மணிப்பூர், அசாம் மாநிலங்களில் தொடரும் கனமழை மற்றும் சூறாவளிக்காற்று

ரிமல் புயல் கரையைக் கடந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
ரிமல் புயல்
ரிமல் புயல்புதிய தலைமுறை

அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் ரிமல் புயல் கரையை கடந்துவருவதால் பலத்த காற்றுடன், கனமழை பெய்து வருகிறது. அசாம் மாநிலத்தில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் உள்பட 17 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் பேரிடர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பலத்த காற்று வீசியதால், பல்வேறு இடங்களில் மரங்கள் மின்கம்பங்கள் மீது விழுந்தன. இதனால் ஆங்காங்கே மின்விநியோகம் தடைபட்டது. பல்வேறு முக்கிய சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை அசாம் மாநில அரசு துரிதப்படுத்தியுள்ளது.

ரிமல் புயல்
மிசோரம்|கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 21 பேர் உயிரிழப்பு.. மழையால் மீட்புப் பணி பாதிப்பு

மணிப்பூரிலும் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இம்பால், காங்போக்பி, சேனாதிபதி உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மீட்பு பணிகளில் சிக்கல் நிலவுகிறது.

இம்பால்-ஜிரிபாம் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி லாரி ஒன்று பள்ளத்தாக்கில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுதவிர நாகலாந்து, மிசோரம் மாநிலங்களிலும் கனமழையால் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com