'கோடை வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்’ - எச்சரிக்கும் வானிலை மையம்

'கோடை வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்’ - எச்சரிக்கும் வானிலை மையம்
'கோடை வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்’ - எச்சரிக்கும் வானிலை மையம்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலக் கட்டத்தில் கோடை வெப்பம் வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என இந்திய ‌வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாதம் முடிவடையவுள்ள நிலையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இப்போதே அதிகரித்து காணப்படுகிறது. பகலில் கடும் வெயிலும் இரவு நேரங்களில் குளிரும் நிலவுகிறது. தற்போதுள்ள வெப்பத்தைப் பார்த்தால் இனி வரும் மாதங்கள் குறித்து இப்போதே கவலை வருகிறது. குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில் கோடை வெப்பம் வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என இந்திய ‌வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மார்ச் முதல் மே மாதம் வரை அனல் காற்று வீசக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், டெல்லி, உத்தராகண்ட், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், ஒடிஷா, கடலோர ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கோடை வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com