End Card போடாத ‘எல் நினோ’.. வாட்டி வதைக்கும் வெப்ப அலையின் பின்னணி இதுதான்.. தமிழ்நாட்டின் நிலை?

எல்நினோவின் தாக்கத்தால் இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பது என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
வெப்ப அலை
வெப்ப அலைமுகநூல்

இந்தியா முழுவதும் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதத்தை தாண்டி அடிக்க ஆரம்பித்து விட்டது. இந்த அதிகரிக்கும் வெப்ப அலைக்கான காரணம் எல் நினோ நிகழ்வு முழுவதாக முடிவயடையாததுதான்.

எல் நினோ

எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் குறிப்பிட்ட காலத்திற்குள் வெப்பநிலை அதிரிக்கும் நிகழ்வாகும்.இது சராசரியாக 5 ஆண்டுகள் ஒருமுறை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்நினோவின் தாக்கத்தால் இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பது என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

இந்தியாவில் வெப்ப அலை குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பது என்ன?

வடமேற்கு இந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவில் இயல்பை விட இரண்டு மடங்கு அதிகமாக வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக, டெல்லி, பஞ்சாப்,உத்திரபிரதேசம், மேற்கு வங்கம்,ஹரியானா,மத்திய பிரதேசத்தின் சிலபகுதிகளுக்கு சுமார் 7 நாட்களுக்கான வெப்ப அலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும், மேற்கு ராஜஸ்தான், குஜராத் போன்ற பகுதிகளுக்கு அடுத்த 11 நாளுக்கான வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வெப்ப அலை எச்சரிக்கை மட்டுமல்லாது மழைக்கான எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. அதன்படி, மணிப்பூர், திரிபுரா, அருணாச்சலம் ,மேகாலயா,இமாச்சல் உள்ளிட்ட பனிப்பிரதேசம் போன்ற பகுதிகளுக்கு மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மே மாதத்தில் இயல்பை விட அதிக வெப்பநிலையே பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் வெப்ப அலை குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பது என்ன?

எல் நினோவின் தாக்கம் கடல் பகுதியில் இருந்து விலகிவிட்டாலும் வளிமண்டலத்தில் அதன் தாக்கம் ஆங்காங்கே நிலவி வருகிறது.

இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி கரூர் பரமத்தியில் இதுவரை இல்லாத அளவாக 111.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இது வரலாற்றிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவான நான்காவது வெப்பநிலையாகும்.

மேலும், தருமபுரியில் இதுவரை இல்லாத அளவிற்கு 105.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், பதிவான இந்த வெப்பமானது வரலாற்றிலேயே பதிவாகாத அதிகபட்ட இரண்டாவது வெப்பநிலையாகும்.

வெப்ப அலை
தமிழக மக்களே உஷார்... ஒரே நேரத்தில் இரு எச்சரிக்கை!

மேலும், ”நேற்றைய சூழலை பொறுத்தவரை தமிழ்நாட்டில் 20 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டு வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்ப அலை தொடரும், நேற்றை விட வெப்ப அலை இன்று சற்று அதிகமாகவே இருக்கும். நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாவட்ட வாரிய வெளுத்து வாங்கிய வெயிலின் நிலவரம்

  • தமிழகத்தில் அதிபட்சமாக வேலூரில் 111 டிகிரி பாரன்ஹீட் ,கரூர் பரமத்தியிலும் 111 டிகிரி பாரன்ஹீட் இயல்பைவிட 7 டிகிரி அதிகரிப்பு.இதற்கு முன்னதாக, ஈரோட்டில் 109 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகி இருந்ததுதான் அதிக அளவாக இருந்தது.

  • இன்று அதிகமாக வேலூரில்110.6 டிகிரி பாரன்ஹீட் அதாவது111 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தியுள்ளது. அடுத்ததாக தருமபுரியில் 107 டிகிரியும், சேலத்தில் 107 டிகிரியும் பதிவானது. மதுரையில் 106 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகி உள்ளது.

  • சென்னை நுங்கம்பாக்கத்தில் முதன்முறையாக 100 டிகிரியை வெயில் கடந்துள்ளது. மீனம்பாக்கத்தில் 105 டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பம் பதிவானது.

  • தமிழகத்தில் மொத்தம் 20 இடங்களில வெயில் சதம் அடித்துள்ளது. இவ்வாறு அதிக அளவில் வெயில் 100ஐ கடந்திருப்பது இதுவே முதன்முறையாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com