\
Hearts Aging Faster in Young Indians Due to Obesity
obesity web

வேகமாக முதிர்ச்சி அடையும் இளம் இந்தியர்களின் இதயம்.. காரணம் என்ன?

உடல் பருமனால் இளம் இந்தியர்களின் இதயம் வேகமாக முதிர்ச்சி அடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Published on

இந்தியாவில் உடல் பருமன் விகிதம் அதிகரித்து வருவதால், பலரின் உண்மையான வயதைவிட அவர்களின் இதயத்தின் வயது மிக வேகமாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி, கடந்த சில ஆண்டுகளில் இந்தியப் பெண்களிடையே உடல் பருமன் 30.7 சதவீதமாகவும், ஆண்களிடையே 27.3 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

உடல் பருமன்
உடல் பருமன்எக்ஸ் தளம்

முறையற்ற உணவுப் பழக்கம், போதிய உடற்பயிற்சியின்மை மற்றும் மன அழுத்தம் ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. இதனால், 35 வயதான ஒருவரின் இதயம், 60 வயது முதியவரின் இதயத்தைப்போல பலவீனமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு, ரத்தநாளங்களைச் சேதப்படுத்தி, இளம் வயதிலேயே நீரிழிவு மற்றும் மாரடைப்பை உருவாக்குகிறது. எனினும், ஆரோக்கியமான உணவு முறை, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் முறையான தூக்கத்தின் மூலம் இதயத்தின் வயதைக் குறைத்து, மாரடைப்பு அபாயத்தைத் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com