\
“ஏழைகள் பக்கம் நின்ற உண்மையான தலைவர்”- மன்மோகன் சிங் புகழுரை

“ஏழைகள் பக்கம் நின்ற உண்மையான தலைவர்”- மன்மோகன் சிங் புகழுரை

“ஏழைகள் பக்கம் நின்ற உண்மையான தலைவர்”- மன்மோகன் சிங் புகழுரை
Published on

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி கருணாநிதி உயிரிழந்தார். கருணாநிதியின் மறைவுக்கு தமிழக, தேசிய தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மன்மோகன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எப்போதும் ஏழைகள் பக்கம் நின்ற உண்மையான தலைவர். பல்துறை மேதையை நாடு இழந்துவிட்டது. இந்தியாவின் மிகவும் ஆற்றல் வாய்ந்த தலைவர்களுள் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நம்முடைய ஜனநாயகத்தின் உண்மையான பிரதிநிதி. தமிழக மக்களுக்காக ஓய்வில்லாமல் சோர்வில்லாமல் உழைத்தார். அவர் நாட்டுக்கு செய்த பங்களிப்பு மறக்க முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com