கேரள நிலச்சரிவு: ஒரு வயது மகனை நெஞ்சோடு அணைத்தபடி உயிரிழந்த அம்மா!

கேரள நிலச்சரிவு: ஒரு வயது மகனை நெஞ்சோடு அணைத்தபடி உயிரிழந்த அம்மா!

கேரள நிலச்சரிவு: ஒரு வயது மகனை நெஞ்சோடு அணைத்தபடி உயிரிழந்த அம்மா!
Published on

கேரள நிலச்சரிவில், தனது ஒரு வயது மகனை நெஞ்சோடு அணைத்தபடி தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக, இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேரை காணவில்லை. வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட 2.5 லட்சம் பேர் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்துக்கு வயநாடு, மலப்புரம் உள்பட 14 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகி றது. மலப்புரம் அருகே மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் நேற்று அதிர்ச்சிk காட்சி ஒன்றைக் கண்டனர். மலப்புரம் அருகேயுள்ள கொட்டக்கண்ணு, சாத்தக்குளம் பகுதிகளில் நேற்று மீட்பு பணிகள் நடந்தன. இங்கு கீது (22) என்ற இளம் பெண் உட்பட சிலர் உயிரிழந்திருந்தனர். அவர்கள் உடல்களைத் தேடும் பணி நடந்தது. அப்போது ஒரு இடத்தில் கீது, தனது ஒரு வயது மகன் துரு வனை நெஞ்சோடு அணைத்தபடி உயிரிழந்த காட்சியைக் கண்டதும் மீட்புக் குழுவினர் கண் கலங்கிவிட்டனர். அங்கு கூடி யிருந்தவர்கள் கதறினர்.

பின்னர் அவர்களின் உடல்களை மீட்டனர். கீதுவின் கணவர் சரத்தும் நிலச்சரிவின் போது அவர்களுடன் தான் இருந்திருக் கிறார். அவர் எப்படியோ அதிர்ஷ்டவசமாகத் தப்பிவிட்டார். சரத்தின் அம்மா மற்றும் மேலும் சிலரின் உடல்களை மீட்பு பணி யினர் அந்தப் பகுதியில் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com