குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு நாளை மறுநாள் இதய அறுவை சிகிச்சை

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு நாளை மறுநாள் இதய அறுவை சிகிச்சை

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு நாளை மறுநாள் இதய அறுவை சிகிச்சை
Published on

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நாளை மறுநாள் இதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

லேசான நெஞ்சுவலி காரணமாக குடியரசுத் தலைவர் நேற்று முன் தினம் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் அடிப்படையில் இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் குடியரசுத் தலைவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நாளை மறுநாள் இதய அறுவை சிகிச்சை நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் குடியரசுத் தலைவரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் ராணுவ மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com