'கட்சி தலைமையில் மாற்றம் தேவை’ – ராஜஸ்தான் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வாதம்

'கட்சி தலைமையில் மாற்றம் தேவை’ – ராஜஸ்தான் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வாதம்

'கட்சி தலைமையில் மாற்றம் தேவை’ – ராஜஸ்தான் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வாதம்
Published on

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையே பிளவு ஏற்பட்டது. இதையடுத்து, தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சச்சின் பைலட் டெல்லி அருகே முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கு மத்தியில், சச்சின் பைலட்  மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை மேற்கொள்ளவும் அசோக் கெலாட் அரசு முயற்சித்து வருகிறது. சபாநாயகரின் தகுதி நீக்க நோட்டீஸூக்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

சபாநாயகரின் சார்பில் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங் ஆஜரானார். நீதிமன்றத்தில் அவர் வாதிடுகையில், ‘’சபாநாயகரின் நோட்டீஸை எதிர்க்க தகுதியான காரணங்கள் எதுவும் மனுவில் இடம்பெறவில்லை’’ என்றார்.

சச்சின் பைலட்  தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- "இந்த குறுகிய கால அறிவிப்பின் மூலம், கட்சி தலைமையில் மாற்றம் வேண்டுமென்பதை, நாங்கள் ஜனநாயக முறையில் கேட்டுளோம் என்பதை கருத்தில் கொள்ளாமல், இவர்கள் தலைமையின் மீது உள்ள எங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை பறிப்பதாக, பயமுறுத்துவதாக அமைகிறது.

தற்போது செயல்படும் அரசிற்கு எதிரான தங்கள் கூற்றுகளை பொறுக்க முடியாத முதலமைச்சர், எந்தவொரு நோக்கமும் இன்றி காங்கிரஸ் சட்டப்பேரவை கூட்டத்தில் எங்களுக்கு எதிராக ஆதாரமற்ற கூற்றுகளை முன்வைத்துள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டது.

அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நாளை செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) மாலை 5.30 மணி வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு நடுவே ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை இந்த வாரம் கூட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் நீக்கம் செய்யப்பட்டால் பேரவையின் பலம் 181-ஆக குறைந்துவிடும். பெரும்பான்மையை நிரூபிக்க 91 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால்போதும் என்பதால், இது ஆளும் அசோக் கெலாட் அரசுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சியான பாஜகவுக்கு 72 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com