“அரசு மருத்துவமனையா? வேண்டாம்” - டாக்டர்கள் பற்றிய ஒரு பகீர் ஆய்வு

“அரசு மருத்துவமனையா? வேண்டாம்” - டாக்டர்கள் பற்றிய ஒரு பகீர் ஆய்வு

“அரசு மருத்துவமனையா? வேண்டாம்” - டாக்டர்கள் பற்றிய ஒரு பகீர் ஆய்வு
Published on

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 10.8 லட்சம் பேரில் 1.1 லட்சம் அல்லது 10 சதவிகித ஆங்கில மருத்துவர்கள் மட்டுமே அரசுடன் இணைந்து செயல்படுவதாக மத்திய சுகாதாரப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் குறிப்பாக ஏழைகள் நோயுற்ற போது அரசு மருத்துவமனையும் ஆரம்ப சுகாதார நிலையத்தையும் நம்பியே வாழ்ந்து வருகின்றனர். அதற்கு காரணம் தனியார் மருத்துவமனையை ஒப்பிடுகையில் அரசு மருத்துவமனையில் இலவசமாக மருத்துவம் கிடைக்கிறது என்பதால்தான்.

ஆனால் சம்பளம் மற்றும் மற்ற வசதிகளை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனையை விட தனியார் மருத்துவமனையில் பணிபுரியவே 90 சதவிகித மருத்துவர்கள் விரும்புகின்றனர்.

மத்திய சுகாதாரப் புலனாய்வு பிரிவு அளித்த தரவின் படி, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 10.8 லட்சம் பேரில் 1.1 லட்சம் அல்லது 10 சதவிகித ஆங்கில மருத்துவர்கள் மட்டுமே அரசுடன் இணைந்து செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சராசரியைப் பொறுத்தவரை, 10% மருத்துவர்களில் கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரில் 4.8% மட்டுமே பொதுத் துறையில் சேர்ந்துள்ளனர். இதேபோல், தமிழ்நாட்டில் 5.6 சதவிகிதமும், மகாராஷ்டிராவில் 4.3 சதவிகிதமும் சேர்ந்துள்ளனர்.

மேலும் “உத்திரப் பிரதேசம், ஜார்கண்ட், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் போதுமான மருத்துவர்கள் இல்லை. கர்நாடகா, மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கூட போதுமான மருத்துவர்கள் இல்லை.

தேசிய அளவில் 11 ஆயிரத்து 82 பேருக்கு ஒரு மருத்துவர் மட்டுமே இருக்கிறார். உத்திரப் பிரதேசத்தில் 20 ஆயிரம் மக்களுக்கு ஒரு மருத்துவர் மட்டுமே இருக்கிறார். ஜார்கண்ட்டில் 18 ஆயிரத்து 518 பேருக்கு ஒரு மருத்துவர் எனவும் மத்தியப் பிரதேசத்தில் 17 ஆயிரத்து 192 பேருக்கு ஒரு மருத்துவர் எனவும் மகாராஷ்டிராவில் 17 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் எனவும் கர்நாடகாவில் 13 ஆயிரத்து 556 பேருக்கு ஒரு மருத்துவர் எனவும் இருக்கிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவர் அஜித் கூறுகையில், “பிரச்னை என்னவேன்றால் நீண்ட நாட்கள் ஆனாலும் அரசு மருத்துவனையின் கட்டடங்களையும் தொழில்நுட்பங்களையும் மாற்றாமல் அப்படியே வைத்திருப்பது தான் எனத் தெரிவித்தார். தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் தங்கள் பணி சார்ந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது எனக் குறிப்பிட்டார்.

இதுகுறித்து மருத்துவர் தெல்மா நாராயன் கூறுகையில், “இதுகுறித்து மக்களிடையே பல விவாதங்கள் நடக்கின்றன. இந்தியாவில் அதிக அல்லோபதி மருத்துவர்கள் குறைபாடு இருக்கிறது. பெரும்பாலான மருத்துவர்கள் தனியாரை தேடி போகின்றனர். இது சம்பந்தமாக சரியான சட்டம் கொண்டுவர வேண்டும். சம்பளத்திற்காக மட்டும் தனியாரை நோக்கி செல்வதில்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளன. தனியார் மருத்துவனையில் புதுபுது விஷயங்களை கற்றுக்கொள்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com