இந்தியா
செப்டம்பர் 21 முதல் திறன் பயிற்சி நிறுவனங்கள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
செப்டம்பர் 21 முதல் திறன் பயிற்சி நிறுவனங்கள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
செப்டம்பர் 21 முதல் திறன் பயிற்சி நிறுவனங்கள், ஆய்வகங்களில் டெக்னிக்கல் ப்ரோகிராம் நடத்தும் உயர்கல்வி நிறுவனங்களை திறக்கலாம் என்று அறிவித்த மத்திய அரசு அதற்கென சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில்,
''ஒவ்வொரு மாணவருக்கும் இடையில் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மடிக்கணினிகள், நோட்புக், பேனா ஆகியவற்றை மாணவர்கள் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
போதிய தனிமனித இடைவெளியைப் பின்பற்றவும் வகுப்பறைகளுக்குள் தொற்றைத் தடுக்கவும் பள்ளிகளில் வெவ்வேறு கால அட்டவணைகள் பின்பற்றப்பட வேண்டும். முகக் கவசம் கட்டாயம். ஆல்கஹால் கலந்த கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக செப்டம்பர் 21-ந் தேதி முதல், பள்ளிகளின் செயல்பாடுகளை பகுதி அளவுக்கு அனுமதிyத்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

