\
Health Insurance May Introduce 10% Co-Pay on Claims
நேஹா போராPTI

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் வெளிச்சம் பெற்றவர்.. தேசத்தின் கவனத்தை ஈர்த்த இளம் போராளி நேஹா போரா!!

டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர் தற்போது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்.
Published on: 

கருத்தாழம் மிக்க பேச்சு... துடிப்பான செயல்பாடு... யாருக்கும் அஞ்சாத துணிச்சல்... இதுதான் நேஹா போரா. 29 வயதான இவர் டெல்லியில் கடந்த ஜூலையில் நடந்த கரப்பான் ஜனதா கட்சி போராட்டம் மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஜந்தர் மந்தரில் 23 நாள் உண்ணாவிரதம் இருந்தவர். உடல்நலம் குன்றியபோதும் தளராத அவரது உறுதியானது நாடு முழுவதலுமான மாணவர்களின் எழுச்சிக்கு மையப் புள்ளியாக அமைந்தது, அமைதியான விடாமுயற்சி நவீன ஜனநாயகத்தில் ஒரு வலிமையான சக்தி என்பதை நிரூபித்தது.

நேஹா போரா
நேஹா போராX

உத்தராகண்ட்டில் பிறந்த நேஹா போரா ஒரு ராணுவ வீரரின் மகள். மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் தந்தை பணிபுரிந்ததால் பதின்பருவத்தை அங்கேயே கழித்தார். இங்கு வளர்ந்த நாட்களே தன் அரசியல் பார்வையை வடிவமைத்ததாக கூறுவார் நேஹா போரா. டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர் தற்போது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். நேஹா தற்போது மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவுத் தலைவராக உள்ளார்.

சாமானிய மக்களுக்காகவும் அதிகாரத்தை எதிர்த்தும் இவர் உரக்க எழுப்பும் கேள்விகள் சமூகத்தளங்களின் நாடெங்கும் எதிரொலிக்கின்றன. இந்தியாவின் புதிய நம்பிக்கையாகவும், ஜென் ஸீக்களின் தேசிய அடையாளமாகவும் உயர்ந்து நிற்கிறார் நேஹா.

Health Insurance May Introduce 10% Co-Pay on Claims
இந்தியாவில் குளிர் காலத்திலும் எல் நினோ தாக்கம்? உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - வெளியான அறிக்கை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com