அமித்ஷா தமிழகம் வருகை.. புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. இன்னும் சில முக்கியச் செய்திகள்!

அமித்ஷா தமிழகம் வருகை.. புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. இன்னும் சில முக்கியச் செய்திகள்!

அமித்ஷா தமிழகம் வருகை.. புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. இன்னும் சில முக்கியச் செய்திகள்!
Published on

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்து பிப்ரவரியில் பயன்பாட்டுக்கு வருகிறது. பொதுமக்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் எனத் தகவல்.

சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. நாளை மறுநாள் முதல் பொதுக்கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு.

பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா சென்னை வருகிறார். கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்ப்பு

மு.க.அழகிரி ஆதரவாளரும் திமுக முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம், அமித்ஷாவை சந்திக்கிறார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில் சந்திப்பதால் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் அதிமுக முக்கிய ஆலோசனை. அமித் ஷா தமிழகம் வரும் நிலையில் கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை ஜனவரியில் தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பெயரில் மக்களை சந்திக்கவும் திமுக மூத்த தலைவர்கள் திட்டம்

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலுள்ள சசிகலாவை விடுதலை செய்வதில் சிறப்பு சலுகை இல்லை. கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை பேட்டி.

காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் மிகப் பெரிய நாசவேலை நடத்த திட்டமிட்டிருந்ததாக தகவல். உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை

ஆன்லைன் ரம்மி போன்ற இணைய வழி விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல். சூதாட்டம் நடத்தினால் 2 ஆண்டும், விளையாடினால் 6 மாதமும் சிறை தண்டனை

சிபிஎஸ்இ பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும். தேர்வுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு.

நாளை மறுநாள் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி. அரபிக் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com