#TopNews | மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த ரஜினி முதல் பின்தங்கிய கோலி வரை..!

#TopNews | மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த ரஜினி முதல் பின்தங்கிய கோலி வரை..!

#TopNews | மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த ரஜினி முதல் பின்தங்கிய கோலி வரை..!
Published on

டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு. நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்திருப்பதாக காவல்துறை தகவல்

காவல்துறையினரின் மெத்தனப் போக்கே டெல்லி வன்முறை பெரிதானதற்கு காரணம் என உச்ச நீதிமன்றம் கண்டனம். வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பா.ஜ.க. தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

டெல்லி மக்கள் அனைவரும் அமைதி காக்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள். வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக சோனியா காந்தி வலியுறுத்தல்

டெல்லியில் வன்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு. அமைதியை வலியுறுத்தி காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி பேரணி

டெல்லி வன்முறைக்கு மத்திய உளவுத்துறையின் தோல்வியே காரணம் என தெரிவித்த ரஜினி அதற்காக மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தையும் பதிவு செய்தார். வன்முறையை ஒடுக்க முடியாவிட்டால் ராஜினாமா செய்யுங்கள் என்றும் ஆவேசம்

கூட்டணி கட்சிகளுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்குவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யயும். தேமுதிகவின் கோரிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்

டெல்லி வன்முறைகள், அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. சென்னையில் திமுக தலைவர் மு.க.‌ஸ்டாலின் பேச்சு

பழங்கால சிலைகளை பாதுகாக்க அரசின் நடவடிக்கைகள் என்ன? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

கொரோனாவால் அதிகம் பாதித்த வுகானில் இருந்து 76 இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர். இந்திய விமானப்படை விமானம் அழைத்து வருகிறது

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்துக்கு முன்னேற்றம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com