TopNews | ஊரக உள்ளாட்சி தேர்தல்; சபரிமலை கோயில் அடைப்பு... இன்னும் சில முக்கியச் செய்திகள்!
முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 76.19 சதவிகித வாக்குகள் பதிவு. பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்
உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு இடங்களில் வன்முறை. வாக்குப் பெட்டிகளுக்கு தீவைப்பு. காவல்துறையினர் தடியடி. திருடப்பட்ட வாக்குப்பெட்டி மீட்பு
வாக்குப்பெட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு. தேர்தல் முடிவுகளை நிறுத்திவைக்க கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் பொது நல மனு
2ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் ஊரகப் பகுதிகளில் மாலையுடன் ஓய்கிறது பரப்புரை. 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நாளை மறுநாள் வாக்குப் பதிவு
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு மரண தண்டனை. கோவை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் போராட்டம். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சிறுபான்மையினரின் குடியுரிமையை பறிக்கும் வகையிலான சட்டப் பிரிவை சுட்டிக்காட்டத் தயாரா? ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா சவால்
மண்டல பூஜை நிறைவடைந்ததை அடுத்து சபரிமலை கோயில் அடைப்பு. 41 நாட்களில் 157 கோடி ரூபாய் காணிக்கை செலுத்திய பக்தர்கள்
காங்கிரஸ் கட்சியின் 135ஆவது ஆண்டு நிறுவன தினம். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இன்று பேரணி.