TopNews | சூரிய கிரகணம்;சுனாமி நினைவு தினம்... இன்னும் சில முக்கியச் செய்திகள்!

TopNews | சூரிய கிரகணம்;சுனாமி நினைவு தினம்... இன்னும் சில முக்கியச் செய்திகள்!

TopNews | சூரிய கிரகணம்;சுனாமி நினைவு தினம்... இன்னும் சில முக்கியச் செய்திகள்!
Published on

இன்று காலை 8 மணி முதல் 11.15 மணி வரை நிகழ்கிறது வளைய சூரிய கிரகணம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 4 மணி நேரம் நடை சாத்தப்படும் என தேவசம்போர்டு தகவல். சூரிய கிரகணம் நிகழும்போதும் திருப்பதி, திருத்தணி கோவில்கள் திறந்திருக்கும் என அறிவிப்பு

156 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் தீவிரம். 27 மாவட்டங்களில், ஆயத்தப்பணிகளை முடுக்கிவிட்டுள்ள ஆட்சியர்கள்

காஷ்மீர் பனிப்பொழிவில் சிக்கித்தவித்த தமிழ்நாட்டு லாரி ஓட்டுநர்கள் 200 பேர் விடுவிப்பு

2024ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படும் -அடல் நிலத்தடி நீர் திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உறுதி

user

இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் -ஐதராபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

டெல்டா மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சுனாமி தாக்குதலின் 15 ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிப்பு - பாதிக்கப்பட்ட பகுதிகளில் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com