2வது தவணை கொரோனா தடுப்பூசி.. வடமாநிலங்களில் நிலநடுக்கம்.. முக்கியச் செய்திகள்!

2வது தவணை கொரோனா தடுப்பூசி.. வடமாநிலங்களில் நிலநடுக்கம்.. முக்கியச் செய்திகள்!
2வது தவணை கொரோனா தடுப்பூசி.. வடமாநிலங்களில் நிலநடுக்கம்.. முக்கியச் செய்திகள்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்வு. மேலும் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அச்சம்.

பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி. தலா 3 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

டெல்லி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம். கட்டிடங்கள் குலுங்கியதால் அச்சத்தில் வெளியேறிய மக்கள்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருவதையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம். விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கம் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

நாடு முழுவதும் 2ஆவது தவணை கொரோனா தடுப்பூசி இன்று முதல் தொடக்கம். 28 நாட்கள் நிறைவடைந்தவர்களுக்கு மீண்டும் தடுப்பூசி போடப்படுகிறது.

கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி ரசீதை இன்று வழங்குகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் பரப்புரையில் உறுதி.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். விழுப்புரத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு.


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம். இடைக்கால பட்ஜெட் குறித்து முக்கிய ஆலோசனை.

அரசின் எச்சரிக்கையை அடுத்து அடிபணிந்தது ட்விட்டர் நிர்வாகம். மத்திய அரசு சுட்டிக்காட்டிய பெரும்பாலான கணக்குகள் முடக்கப்பட்டதாக தகவல்.

7 நாட்களாக போக்கு காட்டிய சங்கர் யானை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. கும்கி யானைகள் உதவியுடன் முதுமலைக்கு கொண்டு சென்று, மரக்கூண்டில் அடைப்பு.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் சென்னையில் இன்று தொடக்கம். முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க விராட் கோலி படை முனைப்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com