சூடு பிடிக்கும் தமிழக அரசியல்களம்; லடாக் எல்லையில் குறையும் பதற்றம்.. முக்கியச் செய்திகள்!

சூடு பிடிக்கும் தமிழக அரசியல்களம்; லடாக் எல்லையில் குறையும் பதற்றம்.. முக்கியச் செய்திகள்!

சூடு பிடிக்கும் தமிழக அரசியல்களம்; லடாக் எல்லையில் குறையும் பதற்றம்.. முக்கியச் செய்திகள்!
Published on

தமிழ்நாட்டில் ஏப்ரல் 4ஆவது வார‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ம் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்.

எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை உடைக்க முடியாது. டிடிவி தினகரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால்.

தமிழ்நாட்டில் யானைகள் இறப்பு தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு. குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் வெவ்வேறு மாநிலங்களில் இருப்பதால் சிபிஐ விசாரணை அவசியம் எனவும் கருத்து.

மயக்க ஊசி செலுத்தப்பட்ட சங்கர் யானை இயல்புநிலைக்கு திரும்பும்வரை காத்திருந்து அழைத்துச் சென்ற பெண் யானைகள். இரண்டாவது ஊசி செலுத்திப் பிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் வனத்துறையினர் பேரதிர்ச்சி.

நாட்டில் பிரச்னைகளைத் தூண்ட பல சக்திகள் முயல்வதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு. எதிர்ப்புத் தெரிவித்து, மக்களவையிலிருந்து காங்கிரஸ், திமுக, திரிணாமூல் எம்பிக்கள் வெளிநடப்பு.

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க முடியாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டம். நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வரி வருவாயையே சார்ந்திருப்பதாக விளக்கம்.

பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில் உரிமை குழுவின் 2வது நோட்டீஸையும் ரத்து செய்தது உயர் நீதிமன்றம். குட்கா அரசின் ஆட்டம் முடியும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கருத்து.

ஆரோக்கியமான கருத்து பரிமாற்றங்களுக்கு வெளிப்படைத்தன்மையே அடிப்படை. விவசாய போராட்டம் தொடர்பாக மத்திய அரசுடன் நெருடல் ஏற்பட்ட நிலையில் ட்விட்டர் நிர்வாகம் அறிக்கை.

லடாக்கில் அமைதியை நிலைநாட்ட இந்தியாவும் சீனாவும் ஒப்புதல். எல்லையில் பதற்றம் குறைவதற்கான சூழல் உருவாகியிருப்பதாக நம்பிக்கை.

மியான்மர் ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா. அதிகாரத்தை கைவிட்டு, மக்களின் விருப்பத்திற்கு மரியாதை தர அதிபர் பைடன் அறிவுறுத்தல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com