விரைவில் கொரோனா தடுப்பூசி.. டெல்லி விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!

விரைவில் கொரோனா தடுப்பூசி.. டெல்லி விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
விரைவில் கொரோனா தடுப்பூசி.. டெல்லி விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை. 3-வது கட்டமாக 26 ஆயிரம் பேரிடம் பரிசோதிக்க பாரத் பயோ டெக் நிறுவனம் முடிவு.

முதற்கட்டமாக 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி. சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவிப்பு.

அதிமுக ஆட்சியை கலைக்க திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கொள்ளும் முயற்சிகள் கானல் நீராக மாறும் -ராமநாதபுரம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு.

கோவை கூட்டத்தில் ஒரு பெண்ணை வைத்து கலவரத்தை ஏற்படுத்த அதிமுக முயற்சி. திமுக-வினர் கண்ணியம் காத்ததாக அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி.

எதிர்க்கட்சியாக இருக்கும் போதே அப்பாவி மக்களை திமுக தாக்குகிறது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு.

தமிழகத்தில் புயல் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு 600 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணம். வரும் 7ஆம் தேதி முதல் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

ஆன்லைன் ஆப் மூலம் கடன் கொடுத்து கூடுதல் வட்டி கேட்டு மிரட்டல். இரண்டு சீனர்கள் உள்பட நான்கு பேரை கைது செய்தது சென்னை காவல்துறை.

குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என போராடும் விவசாயிகள் அறிவிப்பு. தலைநகருக்குள் தடையை மீறி நுழையவும் திட்டம்.

இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு மாரடைப்பு. ஆன்ஜியோ சிகிச்சைக்குப் பின் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com