சனிப்பெயர்ச்சி... டெல்லி விவசாயிகள் போராட்டம்.. சில முக்கியச் செய்திகள்!

சனிப்பெயர்ச்சி... டெல்லி விவசாயிகள் போராட்டம்.. சில முக்கியச் செய்திகள்!
சனிப்பெயர்ச்சி... டெல்லி விவசாயிகள் போராட்டம்.. சில முக்கியச் செய்திகள்!

தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம்பெயர்ந்தார் சனீஸ்வர பகவான். திருநள்ளாறு கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு.

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவிற்கு வரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் எடுத்துவர வேண்டிய கட்டாயமில்லை. உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் நாளை மறுநாள் பேச்சுவார்த்தை. டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அறிவிப்பு.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை என பிரதமர் மோடி குற்றச்சாட்டு. தொகுதி வரையறை முடியாததால் தேர்தல் நடத்த முடியவில்லை என முதலமைச்சர் நாராயணசாமி விளக்கம்.

ரஜினிகாந்த்தை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று முடிவெடுக்கப்படும். ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு.

எம்ஜிஆரின் உண்மையான வாரிசு இரட்டை இலை தான் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு. இரட்டை இலை சின்னத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் பரபரப்பு கருத்து.

தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்புகளை மத்திய அரசு சிதைப்பதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு. அதிமுக அரசு உடந்தையாக இருக்கிறது என்றும் விமர்சனம்.

ஜல்லிக்கட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு. 50% பார்வையாளர்களே அனுமதிக்கப்படுவர் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிப்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com