சூடுபிடிக்கும் தேர்தல்களம்.. கேரளாவில் பரவும் பாக்டீரியா நோய்.. சில முக்கியச் செய்திகள்!

சூடுபிடிக்கும் தேர்தல்களம்.. கேரளாவில் பரவும் பாக்டீரியா நோய்.. சில முக்கியச் செய்திகள்!

சூடுபிடிக்கும் தேர்தல்களம்.. கேரளாவில் பரவும் பாக்டீரியா நோய்.. சில முக்கியச் செய்திகள்!
Published on

இன்றைய தினத்தின் சில முக்கியச் செய்திகள்..

  • இங்கிலாந்தில் அதிவேகமாக பரவும் உருமாறிய கொரோனா வைரஸ் கிருமி. இந்தியாவுக்குள் நுழையாமல் தடுக்க மத்திய அரசு இன்று அவசர ஆலோசனை.
  • சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய சென்னை வருகிறது தேர்தல் ஆணைய குழு. 2 நாட்கள் தமிழகத்தில் ஆய்வு செய்ய திட்டம்.
  • அதிமுகவின் கூட்டணி வேறு. கொள்கை வேறு. என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு. சிறுபான்மையினரின் அரணாக இருப்போம் எனவும் கிறிஸ்துமஸ் விழாவில் உறுதி.
  • ஜனவரி முதல் வாரத்தில் பரப்புரை மேற்கொள்ளவிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு. 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வதை இலக்காக கொண்டு செயலாற்ற கட்சியினருக்கு ‌‌‌‌‌ வலியுறுத்தல்
  • எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர், அடுத்தவர் சொல்வதை பற்றி கவலையில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி - முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை பாஜகவே வெளியிடும் என்ற எல்.முருகனின் கருத்துக்கு பதில்
  • எம்ஜிஆரின் வாரிசு தான்தான் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீண்டும் பேச்சு. தனக்கு வரும் கூட்டத்தைக் கண்டு பலரும் அச்சப்படுவதாகவும் கருத்து
  • திமுக ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக சிலரை கட்சி தொடங்க வைக்கின்றனர். ரஜினி கட்சி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறைமுக விமர்சனம்
  • ரசிகர்கள் நினைப்பது விரைவில் நிறைவேறும் என நடிகர் விஜய் பேச்சு. விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் காணொளியில் உறுதி.
  • வேளாண் சட்ட பிரச்னைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாய அமைப்புகளுக்கு மத்திய அரசு மீண்டும் அழைப்பு. நாடெங்கும் இன்று முதல் சங்கிலித் தொடர் போராட்டங்கள் நடத்த விவசாய அமைப்புகள் முடிவு
  • கேரளாவில் பரவி வரும் ஷிகெல்லா பாக்டீரியா நோய். ஒரு சிறுமி உயிரிழப்பு, 50க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
  • கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படங்கள்.வெளிநாட்டு திரைப்பட பிரிவில் சூரரைப் போற்று, அசுரன் போன்ற படங்கள் திரையிடப்படுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com