டெல்டாவில் கனமழைக்கு வாய்ப்பு.. முதல்வர் பழனிசாமிக்கு கொலைமிரட்டல்.. முக்கியச் செய்திகள்!
விவசாயிகளுடன் அனைத்து பிரச்னைகளையும் பேசி தீர்வு காணத் தயார்.வேளாண் சட்டங்கள் தொடர்பான சந்தேகங்களையும் தீர்த்துவைப்பதாக பிரதமர் மோடி அறிவிப்பு.
போராடும் விவசாயிகளை தேச துரோகிகள் என அழைத்ததற்கு மத்திய அரசு மன்னிப்பு கோர வேண்டும். வேளாண் சட்ட விவகாரத்தில் விவசாயிகளை ஏமாற்றுவதையும் நிறுத்திக் கொள்ளுமாறு காங்கிரஸ் வலியுறுத்தல்.
எடப்பாடியில் இன்று தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார் முதலமைச்சர் பழனிசாமி. திமுகவின் அடுத்தகட்ட பரப்புரை நாளை தொடங்குவதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
வேளாண் சட்டங்களின் நன்மை குறித்து விளக்க தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திட்டம். டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவிப்பு.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 200 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு தகவல். அடுத்த ஆண்டு மார்ச்க்குப் பின் 45 மாதங்களில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு உறுதி.
சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களை 'பேக்கிங்' செய்யாமல் சில்லரையாக விற்க தடை. கலப்பட எண்ணெய் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
காஞ்சிபுரம் அரசு அலுவலகத்தில் கழிவறை இல்லாததால் தொட்டியில் விழுந்து பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரம். 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொலை மிரட்டல் கடிதம். கே.கே.நகரில் இருந்து வந்த கடிதம் குறித்து காவல்துறை விசாரணை.
தடையை மீறி போராடியதாக திமுக கூட்டணி கட்சியினர் 1600 பேர் மீது வழக்குப் பதிவு. விவசாயிகளுக்காக எந்தவொரு வழக்கையும் சந்திக்க தயார் என ஸ்டாலின் அறிவிப்பு.
டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை வாட்டும் கடுங்குளிர். ஓரிரு நாட்களுக்குப் பின் குளிர் குறையலாம் என இந்திய வானிலை மையம் அறிவிப்பு.
டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
அடிலெய்டில் நடைபெறும் ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது இந்திய அணி.