தமிழகத்தில் பரவலாக கனமழை.. முதல் டெஸ்ட் போட்டி.. சில முக்கியச் செய்திகள்!
இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் சில..
போராட்டத்தில் ஈடுபடாத விவசாய அமைப்புகளுடன் பேசி குழப்பம் விளைவிக்க வேண்டாம் -டெல்லியில் மூன்று வார காலமாக போராடி வரும் விவசாயிகள் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.
வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என முதலமைச்சர் பேட்டி.தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் போராட்டத்தை தூண்டிவிடுவதாகவும் குற்றச்சாட்டு.
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை விடுவிக்க சர்க்கரை ஆலைகளுக்கு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மானியம். 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள அலைக்கற்றையை ஏலம் விடுவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
மதியம் மூன்று மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட். ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்.
தமிழகத்தில் கடந்த 75 நாட்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது. பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிக எண்ணிக்கையில் சோதனை - சுமார் 7 கோடி ரூபாய் பறிமுதல்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரை ஆண்டு தேர்வு ரத்து. தனியார் பள்ளிகள் ஆன்லைனில் தேர்வு நடத்திக்கொள்ளலாம் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜியை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை. தற்போதைய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி வரும் 31ஆம் தேதி ஓய்வு பெறுவதால் முன்மொழிவு.
சென்னையில் இரவு முழுவதும் பரவலாக மழை. 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிப்பு.
கேரள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அதிக இடங்களில் வெற்றி. நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி
ஆஸ்திரேலிய அணி உடனான முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம். டெஸ்ட் தொடரிலும் முத்திரை பதிக்க இந்திய அணி முனைப்பு.