தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. ரஜினி ஆலோசனை.. மேலும் சில முக்கியச் செய்திகள்!

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. ரஜினி ஆலோசனை.. மேலும் சில முக்கியச் செய்திகள்!

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. ரஜினி ஆலோசனை.. மேலும் சில முக்கியச் செய்திகள்!
Published on

டெல்லியின் 5 முக்கிய எல்லைகளை மறித்து போராடப்போவதாக விவசாய அமைப்புகள் எச்சரிக்கை. போராட்டக்களத்தை மாற்றக்கோரிய உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை நிராகரித்த விவசாயிகள்.

அண்ணாமலைக்கு அரோகரா என பக்தி முழக்கம் ஒலிக்க திருவண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்.கொரோனா கட்டுப்பாடுகளால் தீபத் திருவிழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டும் பங்கேற்பு.

பழநி, திருப்பரங்குன்றம் மலை உச்சிகளிலும் மகாதீபம் ஏற்றப்பட்டது.வீடுகளிலும் அகல் விளக்கு ஏற்றி தீபத்திருவிழா கொண்டாட்டம்.

தமிழகத்தில், வரும் 2ஆம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு.36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடையும் என கணிப்பு.

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரடியாக ஆலோசனை.அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு செய்வார் என தகவல்.

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டதால் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக சென்னை நபர் குற்றச்சாட்டு.விசாரிக்க தொடங்கியது மருந்து கட்டுப்பாட்டு இயக்குரகம்.புகாரில் உள்நோக்கம் என சீரம் இன்ஸ்டிட்யூட் விளக்கம்.

இந்தியாவில் விரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்.மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உறுதி.

தமிழகத்தில் கொரோனா தினசரி இறப்புகள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திற்கு குறைந்தது.9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஆயிரத்து 459 பேருக்கு புதிதாக தொற்று.

இந்திய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.சிட்னியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com