TopNews | குரூப் 4 தேர்வு முறைகேடு; இந்தியா வெற்றி... இன்னும் சில முக்கியச் செய்திகள்!

TopNews | குரூப் 4 தேர்வு முறைகேடு; இந்தியா வெற்றி... இன்னும் சில முக்கியச் செய்திகள்!

TopNews | குரூப் 4 தேர்வு முறைகேடு; இந்தியா வெற்றி... இன்னும் சில முக்கியச் செய்திகள்!
Published on

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் கைதான மூவருக்கு 15 நாள் காவல். அதிரவைக்கும் மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால் விசாரணை தீவிரம்

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு வாழ்நாள் தடை விதித்தது டிஎன்பிஎஸ்சி. அழியும் மையால் தேர்வு எழுதி மோசடி. அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் அம்பலம்

கொரனா வைரஸ் வேகமாக பரவுவதால் சீனாவில் 3 கோடி பேர் முடக்கம். தமிழகம் உட்பட இந்தியாவைச் சேர்ந்த 40 மாணவர்கள் சிக்கித் தவிப்பு

சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய 11 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைப்பு. காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதால் சுகாதாரத்துறை நடவடிக்கை

குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு. தலைநகர் டெல்லியில் 15 ஆயிரம் போலீசார் குவிப்பு

குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

காஞ்சி‌புரம் அருகே பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு தலைவர்கள் கண்டனம். தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரிக்கை

நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. மேல்முறையீடு செய்யப்போவதாக விஷால் தரப்பு அறிவிப்பு

நியூசிலாந்துக்கு எதிரான முதல் இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. அதிரடியாக விளையாடி அசத்தினார் ஸ்ரேயாஸ் ஐயர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com