TopNews | சபரிமலை சீராய்வு மனுக்கள்; டி20 இந்திய அணி... இன்னும் சில முக்கியச் செய்திகள்!

TopNews | சபரிமலை சீராய்வு மனுக்கள்; டி20 இந்திய அணி... இன்னும் சில முக்கியச் செய்திகள்!
TopNews | சபரிமலை சீராய்வு மனுக்கள்; டி20 இந்திய அணி... இன்னும் சில முக்கியச் செய்திகள்!

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் மீது, 9 நீதிபதிகள் கொண்ட விரிவான அரசமைப்பு சாசன அமர்வு இன்று முதல் விசாரணை

95 சதவிகித ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு மற்றும் 1000 ரூபாய் ரொக்கப் பரிசைப் பெற்றதாக அமைச்சர் காமராஜ் தகவல். எஞ்சிய அட்டைதாரர்கள் பரிசை பெற எஸ்எம்எஸ் மூலம் நினைவூட்டப்படும் என்றும் அறிவிப்பு

தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை என மு.க.ஸ்டாலின் விமர்சித்த விவகாரம். காவலர் மரணத்திலும் உள்நோக்கத்துடன் அரசியல் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் பதில்

சென்னையில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 9 சிறுவர்கள் கைது. போதை மாத்திரை வாங்க வழிப்பறி செய்ததாக விசாரணையில் திடுக்கிடும் தகவல்

ஜே.என்.யூ. பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் திட்டவட்டம்

கேரளாவில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்ட மேலும் 2 அடுக்குமாடி குடியிருப்புகள் தகர்ப்பு. உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து நவீன தொழில்நுட்பத்தில் வெடிவைத்து தரைமட்டம்

ஈராக்கிலுள்ள அமெரிக்க விமானத்தள முகாம் மீது 8 ஏவுகணைகள் அடுத்தடுத்து தாக்குதல். பேச்சுவார்த்தைக்கு தயார் என ஈரான் கூறியிருந்த நிலையில் ஏவுகணை வீச்சு

நியூசிலாந்துடனான டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு. ரோகித் சர்மா, முகமது ஷமி மீண்டும் இடம் பிடித்தனர். இளம் வீர‌ர் சஞ்சு சாம்சன் நீக்கம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com