#TopNews | கனமழை...உள்ளாட்சித் தேர்தல்...முஷ்டாக் அலி கோப்பை!

#TopNews | கனமழை...உள்ளாட்சித் தேர்தல்...முஷ்டாக் அலி கோப்பை!

#TopNews | கனமழை...உள்ளாட்சித் தேர்தல்...முஷ்டாக் அலி கோப்பை!
Published on

தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள 8 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு. 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதரபுரம், கடலூர், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

தொடர் மழையால் அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு. சென்னை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகங்களின் தேர்வுகளும் தள்ளிவைப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. மாநிலத்தின் பிற இடங்களில் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதம்

பருவமழை பாதிப்புகள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை. நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக ஆய்வுக்கூட்டம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு. முன்னேற்பாடு பணிகள் நிறைவுபெற்றதாக மாநில தேர்தல் ஆணையர் தகவல்

தெலங்கானாவில் அரசு மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை. வழக்கு விசாரணைக்காக விரைவு நீதிமன்றம் அமைத்து முதல்வர் சந்திரசேக ராவ் உத்தரவு

ஏர்டல், வோடபோன் தொலைபேசி நிறுவனங்களின் கட்டணங்கள் அதிகரிப்பு. 50 விழுக்காடு வரை உயர்த்தப்பட்ட கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன.

முஷ்டாக் அலி கோப்பையில் கர்நாடகம் த்ரில் வெற்றி. ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தி அபாரம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com