இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  
இன்றைய முக்கியச் செய்திகள்!  

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி. இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக சன்னி வக்ஃபு வாரியம் அறிவிப்பு. சீராய்வு மனுத் தாக்கல் செய்யும் எண்ணம் இல்லை என வாரியத் தலைவர் ஜஃபார் அஹமது ஃபரூக்கி பேட்டி

அயோத்தி தீர்ப்பை அனைவரும் ஏற்றிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்.வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கு சிறந்த உதாரணம் என்றும் கருத்து

ராமர் கோயிலை பாஜக அரசிய‌லாக்குவதற்கான கதவு அடைபட்டுவிட்டதாக காங்கிரஸ் கருத்து. அனைவரும் பரஸ்பரம் நல்லிணக்கத்தை காக்க வேண்டும் என ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவு

நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்த பிரச்னைக்கு உச்சநீதிமன்றம் தீர்வு கண்டிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து. உச்சநீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது புல்புல் புயல். மேற்கு வங்கம், ஒடிஷா மாநிலங்களில் தலா ஒருவர் பலி

இந்தியா - வங்கதேசம் இடையே இன்று கடைசி டி20 போட்டி. தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் தீவிரம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com