
அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். உத்தரபிரதேசம் உட்பட நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு
அயோத்தி வழக்கின் தீர்ப்பை வெற்றியாகவோ தோல்வியாவோ பார்க்கக் கூடாது. எந்த தீர்ப்பு வந்தாலும் அமைதியை நிலைநிறுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் கண்காணிப்பு தீவிரம்
காவி சாயத்தில் மாட்டிக்கொள்ள மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டம். தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவருக்கான வெற்றிடம் இருப்பதாகவும் பேட்டி
மகாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர ஃபட்னாவிஸ். முதலமைச்சர் பதவியை அடைவதற்கு பாஜக துணை தேவையில்லை என உத்தவ் தாக்கரே விமர்சனம்
28 ஆண்டுகளாக சோனியா, ராகுல், பிரியங்காவுக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ். கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம். உளவுத்துறை தகவல் அடிப்படையில் நடவடிக்கை என பாஜக பதில்
மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே இன்று கரையை கடக்கிறது புல் புல் புயல். வங்கக் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
30 மற்றும் 40 ரூபாய்க்கு வெங்காயம் விற்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. முதல்கட்டமாக துபாயில் இருந்து 2 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சந்தீப் சவுத்ரி அசத்தல். ஈட்டி எறிதலில் புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றார்