\
இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  
Published on

முதல் ரஃபேல் போர் விமானத்தை வாங்குவதற்காக இன்று பிரான்ஸ் புறப்படுகிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். ஆயுத பூஜையன்று சிறப்பு பூஜைகள் நடத்தி விமானங்களை பெற்றுக்கொள்கிறார்

சீன அதிபரின் தமிழக பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தத் திட்டம். சென்னைப் பல்கலைக்கழக மாணவர் உள்பட திபெத்தை சேர்ந்த 8 பேர் கைது

நாடு முழுவதும் களை கட்டிய நவராத்திரி கொண்டாட்டம். கொல்கத்தா கொலுவில் இடம்பெற்ற தமிழக வீரர் அபிநந்தன் பொம்மை

மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி பெறும் தேவை எழவில்லை என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கர்நாடகா அரசு கடிதம். இருமாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு அணை கட்டும் திட்டத்தை கைவிடுமாறு ஸ்டாலின் வலியுறுத்தல்.

திருப்பதியில் சந்திரபிரபை வாகனத்தில் அருள் பாலித்த மலையப்ப சுவாமி. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஹாங்காங்கில் முகமூடி அணிந்து போராடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு. அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது கண்ணீர்ப்புகைக்குண்டு வீச்சு

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி.குறைந்த போட்டிகளில் 350 விக்கெட்கள் வீழ்த்தி தமிழக வீரர் அஷ்வின் சாதனை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com