\
இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  
Published on

பிரதமர் மோடி - ஷேக் ஹசீனா முன்னிலையில், இந்தியா - வங்கதேசம் இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து. தீஸ்தா நதிநீர் பங்கீடு பிரச்னையில் விரைவில் தீர்வு காணவும் முடிவு

தீபாவளிக்கு விற்பனைக்கு வரும் மாசு குறைந்த பசுமை பட்டாசுகள். குறைவான விலையில் கிடைக்கும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் தகவல்

திருமலையில் கஜ வாகனத்தில் பவனி வந்த மலையப்ப சுவாமி. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சென்னையில் ரயில் படிக்கட்டில் பயணித்த பயணியிடம் வழிப்பறி கொள்ளையர்கள் செல்போன் பறிக்க முயற்சி. பயணி தவறி விழுந்து உயிரிழந்த சோகம். சிறுவன் உட்பட 4 பேர் கைது

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு சாலையில் பூசணிக்காய்களை உடைக்க வேண்டாம் - சென்னை போக்குவரத்து காவல்துறை 

நகைக் கொள்ளை வழக்கில் கைதான மணிகண்டன், கனகவல்லிக்கு 15 நாள் நீதிமன்ற காவல். வாகன தணிக்கையின்போது தப்பியோடிய சுரேஷை பிடித்து விசாரணை எனத் தகவல்

இயக்குனர் மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும். பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

குஜராத் கடலோரத்தில் கரை ஒதுங்கிய பாகிஸ்தான் மீன்பிடி படகுகள். பயங்கரவாதிகள் ஊடுருவலா என பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்சிலும் ரோஹித் சர்மா சதம். வெற்றி பெற 395 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com