\
இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  
Published on

7 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி. இருதரப்பு உறவுகள் வலுப்பெறும் என நம்பிக்கை

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு. பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்.

12ல் இருந்து 5ஆக ஜிஎஸ்டி குறைப்பால் கிரைண்டர் விலை குறையும். ஹோட்டல் அறை வாடகை மீதான ஜிஎஸ்டியையும் குறைத்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு. தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆஜராகி விளக்கம் அளிக்க காவல்துறை சம்மன் எனத் தகவல்

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் ‌வானிலை மையம் தகவல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட 400 பேர் மீதான வழக்கை வாபஸ் பெறலாம். தமிழக அரசுக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் பரிந்துரை

சென்னை அருகே செங்குன்றத்தில் வாகன சோதனையின்போது இளம்பெண் விபத்தில் சிக்கிய பரிதாபம். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடியால் பதற்றம்

பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ள மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு. பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியிருந்த 2 வெளிநாட்டவர் கைது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com