இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  
Published on

சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம்

பொதுவான மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது என ரஜினிகாந்த் அதிரடி கருத்து. பாரதிய ஜனதாவின் ஊதுகுழலாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்

தமிழ்நாட்டில் பிளஸ் ஒன், பிளஸ் டூ தேர்வு நடைமுறையில் மாற்றம். மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு எழுதினால் போதும் என அறிவிப்பு

வங்கியில் நிகழ்ந்த கொலை முயற்சியை தடுத்த காவலாளிக்கு குவிகிறது பாராட்டு. துணிச்சலுடன் செயல்பட்டதாகக் கூறி ராமநாதபுரம் சரக டிஐஜி பாராட்டுச் சான்றிதழ்

புதிய மோட்டார் வாகனச்சட்டத்தின்படி பன்மடங்கு அபராதம் விதிப்பதற்கு எதிர்ப்பு. நாடு தழுவிய அளவில் லாரிகள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com