இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  
Published on

நாட்டில் பல கட்சிகளை கொண்ட நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை தோல்வியடைந்துவிட்டதாக அமித் ஷா பேச்சு

தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

சென்னை பேரூரில் கடல் நீரை குடிநீராக்கும் 3ஆவது திட்டம். அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

மயிலாடுதுறை அருகே 3ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவியின் கையில் கத்திக்குத்து. ஆசிரியரை கைது செய்து போலீசார் விசாரணை

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா. 15 கிலோ வெடிபொருளுடன் வானில் 70 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணை.

தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல். சவுதி இளவரசரின் தகவலால் கச்சா எண்ணெய் விலை குறைந்து பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு அபாயம் ஓரளவு நீங்கியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com