\
இன்றைய முக்கியச் செய்திகள் சில..

இன்றைய முக்கியச் செய்திகள் சில..

இன்றைய முக்கியச் செய்திகள் சில..
Published on: 

சந்திரயான் விண்கலத்திலிருந்து வெளியான லேண்டர் விக்ரமின் சுற்றுப்பாதை 2வது முறையாக குறைப்பு. அதிகாலை 3 மணி 42 நிமிடத்திற்கு திட்டமிட்டபடி சுறறுப்பாதை மாற்றம்.

இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு. இந்தியா - ரஷ்யா இடையிலான வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை நீட்டிப்பு. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இடைக்கால ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கவில்லை.

கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் முக்கிய தலைவருமான டி.கே.சிவகுமார் கைது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை அதிரடி நடவடிக்கை.

தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கான ஆணையை பெற்றார் தமிழிசை சவுந்தரராஜன். 8ஆம் தேதி பதவியேற்கிறார்.

உலகின் அதிநவீன அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள். அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்டு இந்திய விமானப் படையில் சேர்ப்பு.

சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பரவலாக மழை. இன்றும் மழை நீடிக்கும் என, வானிலை ஆய்வு மையம் தகவல்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com