இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  
Published on

டெல்லியில், வீட்டின் சுவர் ஏறிக் குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிகள். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன் ஜாமீன் மறுக்கப்பட்டதால் நடவடிக்கை

டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை

பொய்யர்களால் விஷமப் பிரச்சாரம் செய்யப்படுவதாக ப.சிதம்பரம் குற்றச்சாட்டு. கைது செய்யப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் அளித்த பேட்டியில் சாடல்.

அரசியல் எதிரிகளை அச்சுறுத்த சிபிஐயைப் பயன்படுத்துகிறது பாரதிய ஜனதா. டெல்லி செல்லும் முன்னர் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

சுவர் ஏறிக்குதித்து கைது செய்வதற்கு சிதம்பரம் என்ன பயங்கரவாதியா? என கேஎஸ் அழகிரி கேள்வி. மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாட்டில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு

ப.சிதம்பரம் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திருமாவளவன் விமர்சனம். காஷ்மீர் பிரச்னையை மறைக்கவே கைது செய்யப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

சுவர் ஏறிக் குதித்து கைது செய்ய ப.சிதம்பரம் தரப்பே காரணம் என தமிழிசை விளக்கம். நீதிமன்ற வழிகாட்டுதலின் படியே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஹெச்.ராஜா கருத்து

விதைத்தது விளைந்திருப்பதாக, ப.சிதம்பரம் கைது குறித்து ராஜேந்திர பாலாஜி கருத்து. எந்த காழ்ப்புணர்ச்சியுடனும் அணுகக் கூடாது என அமைச்சர் பாண்டியராஜன் வலியுறுத்தல்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com