\
இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  
Published on

முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம். எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்

பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை இன்று தொடக்கிவைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. நேரடியாக பெறப்படும் மனுக்களுக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு காணப்படும் என அறிவிப்பு

இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகரில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 144 தடை உத்தரவுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காஷ்மீர் முதன்மை செயலர் பேட்டி

உயர்த்தப்பட்ட ஆவின் பால் விலை இன்று முதல் அமலுக்கு வந்தது. உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டே விலை உயர்த்தப்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், வேலூரில் சாண எருவுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு

புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது

ஹாங்காங்கில் கைதிகள் நாடு கடத்தப்படும் சட்டம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 11வது வாரமாக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தப்பட்டது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com