இன்றைய முக்கியச் செய்திகள் சில..

இன்றைய முக்கியச் செய்திகள் சில..

இன்றைய முக்கியச் செய்திகள் சில..
Published on


மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணை 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தீவிரம். நீலகிரி, கோவையில் நாளை கன மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்.

மழை, வெள்ள பாதிப்புகளுக்கு 4 மாநிலங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 192 ஆக அதிகரிப்பு. கேரளாவில் அதிகபட்சமாக 83 பேர் உயிரிழப்பு.

மழை பாதிப்புகளை பார்வையிடுவதாக கூறி ஸ்டாலின் விளம்பரம் தேடுவதாக முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு. தமக்கு விளம்பரம் தேவையில்லை என ஸ்டாலின் பதில்.

சிலைக் கடத்தல் வழக்கில் 3 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தப் பெண் கைது. துபாயிலிருந்து சென்னை வந்தபோது குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கினார்.

நீலகிரியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து நிவாரண நிதி வழங்கினார் மு.க.ஸ்டாலின். திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் 10 கோடி ரூபாய் வழங்குவார்கள் எனவும் அறிவிப்பு.

1120 கோடி ரூபாய் வருவாயை மறைத்த மதுபான ஆலைகளின் முப்பதிற்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை முடக்கியது வருமானவரித்துறை.

லடாக் எல்லைப்பகுதியில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான். காஷ்மீர் விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் இருநாடுகளின் இறையாண்மையை மதிப்பதாக சீனா உறுதி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com