HEADLINES | ஆஸ்திரேலிய வீராங்கனைக்கு பாலியல் தொல்லை முதல் கிழக்கு ஆசியாவிற்கு ட்ரம்ப் பயணம் வரை!
புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்..
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை... திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை மையம் கணிப்பு...
நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் தமிழகத்தில் இரண்டாவது நாளாக ஆய்வு... டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் மையங்களில் இன்று ஆய்வு நடத்த திட்டம்...
நாகை, தஞ்சை உள்ளிட்ட காவிரி படுகை மாவட்டங்களில் இன்றும் நெல் கொள்முதல் மையம் செயல்படும்... மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு...
உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாமல் தமிழக அரசுதான் தாமதப்படுத்தியது... தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம்...
வேலூரில் விவசாயிகளுடன் மத்திய வேளாண் துறை அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் கலந்துரையாடல்... நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தல்...
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இரண்டாயிரத்து 100 கனஅடி நீர் வெளியேற்றம்... தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு... செந்நிறத்தில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்...
சென்னை வேளச்சேரி ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் செல்லத் தடை... மழை நீரை விரைந்து அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை...
தனியார் பல்கலைக்கழகங்களுக்கான திருத்த மசோதா திரும்பப் பெறப்பட்டு மறுஆய்வு செய்யப்படும்... உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு...
அதானி குழுமத்தில் எல்ஐசி 33 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்தது குறித்து நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு விசாரணை தேவை... அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் செய்தியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்...
அதானியில் முதலீடு செய்யும் முடிவு சுயமாக எடுக்கப்பட்டதாகவும் மத்திய அரசு அழுத்தம் இல்லை என்றும் எல்ஐசி விளக்கம்... இந்திய நிதித்துறை மீது களங்கம் விளைவிக்கும் முயற்சி என்றும் விமர்சனம்...
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பிஹாரில் குற்றங்கள் வெகுவாக குறைந்துவிட்டது என உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு... ஒவ்வொரு சட்டவிரோத குடியேறியும் திருப்பி அனுப்பப்படுவார் என்றும் திட்டவட்டம்...
பண்டிகைக்காலத்தில் பிஹாருக்கு இயக்கப்படும் ரயில்கள் நிரம்பி வழிவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு... மரியாதையுடன் பயணிப்பது மக்களின் உரிமை என்றும் கருத்து...
மலேசியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சுற்றுப்பயணம்... தென் கொரியாவில் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் வணிக சர்ச்சைகள் குறித்து பேசுவார் எனத் தகவல்...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையை எதிர்த்து தென் கொரியாவில் மக்கள்போராட்டம்...முதலீடு செய்யச்சொல்லி நெருக்கடிஅளித்து கொள்ளையடிப்பதாககுற்றச்சாட்டு...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்வு... ஒரு கிராம் தங்கம் 11 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை... வெள்ளி விலையில் மாற்றம் இல்லை...
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி... சதம் அடித்தார் ரோகித் சர்மா... அதிக ரன் குவித்ததில் 2ஆவது இடத்திற்கு உயர்ந்தார் விராட் கோலி...
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை... அத்துமீறலில் ஈடுபட்டவரை கைது செய்தது காவல் துறை...

