HEADLINES | வங்கக்கடலில் உருவாகும் ‘மோன்தா’ புயல் முதல் காஸா சீரமைப்பு குறித்து ஐ.நா. வேதனை வரை!
புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்..
கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணிப்பு...
வங்கக்கடலில் உருவாகிறது ‘மோன்தா’ புயல்... ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வரும் 27ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என கணிப்பு...
வங்கக்கடலில் நிலவும் காற்ற்ழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது... தமிழகத்தின் 9 கடலோர மாவட்ட மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை...
தொடர் மழையால் நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை... நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதல்வர் அறிவிப்பார் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதில்...
நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய இன்று தமிழகம் வருகிறது மத்திய அரசு குழு... கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பதம் குறித்து மாவட்டந்தோறும் ஆய்வு நடத்த திட்டம்...
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை... உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு...
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடக்கம்... அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணன் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில்...
ஈரோடு சாவடி பாளையம் ரயில்வே நுழைவு மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் இடிந்தது... முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம்...
எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா... சிறந்த தமிழ் நூல், தமிழறிஞர்கள், சிறிய இதழ்கள், தமிழ் பண்பாட்டை பரப்பும் சங்கங்களுக்கு கவுரவும்...
நிதிஷ் குமாரின் தலைமையில் பிஹாரில் என்டிஏ கூட்டணி எதிர்க்கட்சிகளை வீழ்த்தி வரலாறு படைக்கும்... சமஸ்திபூரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு...
பிரதமர் மோடியே நிதிஷ் குமாரின் 55 ஊழல்களை பட்டியலிட்டுள்ளார்... கடந்த காலத்தில் பேசியதை சுட்டிக்காட்டி தேஜஸ்வி யாதவ் விமர்சனம்...
டெல்லியில் ஓரளவு தணிந்தது காற்று மாசு... புகை மண்டலத்தை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிரம்...
ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதலை குறைத்ததா இந்தியா? ட்ரம்பின் வேண்டுகோளை இந்தியா ஏற்றதாக அறிவித்த அமெரிக்க வெள்ளை மாளிகை...
பாகிஸ்தானுக்கு செல்லும் ஆற்று நீரை தடுத்து நிறுத்த ஆப்கானிஸ்தான் திட்டம்... குனார் நதியில் அணைகள் கட்ட முடிவு...
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே தொடரும் மோதலால் நீடிக்கும் பதற்றம்... தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்வு...
சாக்லேட்டில் விஷம் கலந்து தம்மை கொல்ல சதி நடந்ததாக ஈகுவடார் அதிபர் நொபோயா குற்றச்சாட்டு... புகாருக்கு உரிய ஆதாரங்கள் இருப்பதாகவும் விளக்கம்...
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெனிசுலா போர் பயிற்சி... படைத்திறனை சீர்குலைக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சர் லோபேஸ் உறுதி...
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி... தொடரை இழந்த நிலையில், சிட்னி நகரில் நடக்கும் ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெற இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி...
இனப்பெருக்க காலத்தையொட்டி ஆஸ்திரேலியாவில் இடம்பெயரும் சிவப்பு நண்டுகள்... கடற்கரையை ஒட்டிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை...
தமிழகத்தில் நடைபெறும் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியில் இருந்து பாகிஸ்தான் விலகல்... இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் பதிலடியை தொடர்ந்து பாகிஸ்தான் அணி முடிவு...
உடல்நலக்குறைவால் காலமான இசையமைப்பாளர் சபேஷின் உடல் நல்லடக்கம்ம்... நடனமாடி இறுதி அஞ்சலி செலுத்திய ஸ்ரீகாந்த் தேவா...
காஸா மறுசீரமைப்பு குறித்து ஐ.நா. வேதனை தெரிவித்துள்ளது..
ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் ஆயிரத்து 120 ரூபாய் குறைந்தது... ஒரு சவரன் 91 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை...

