அக்டோபர் 23 காலை தலைப்பு செய்திகள்
அக்டோபர் 23 காலை தலைப்பு செய்திகள்web

HEADLINES | வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி முதல் ரயில்பெட்டி கதவை உடைத்த பஞ்சாப் பயணிகள் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளில் வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி முதல் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வரை இடம்பெற்றுள்ளது..
Published on
Summary

புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்..

வலுவிழக்கிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி... வடக்கு உள்தமிழ்நாடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்...

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை... தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி வரை கனமழை தொடரும் என கணிப்பு....

அரூர் அருகே தீர்த்தமலையில் 2 மணி நேரத்தில் 17 சென்டி மீட்டர் மழை பதிவு.... வரலாறு காணாத கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்...

தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை... கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அரக்கோணத்தில் கொட்டித்தீர்த்த கனமழை... 13 சென்டி மீட்டர் மழை பெய்ததால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்..

கனமழை எச்சரிக்கை
கனமழை எச்சரிக்கைpt

ஈரோடு தாளவாடி மலைப்பகுதியில் பலத்த மழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்... சிக்கள்ளி தரைப்பாலம் மூழ்கியதால், மலைக்கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு...

திருப்பதி திருமலை பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழை... மால்வாடி குண்டா, கபில தீர்த்தம் அருவிகளில் ஆர்ப்பரித்த வெள்ளம்..

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் வேகமாக நிரம்பும் நீர்நிலைகள்... அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்படுவதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை...

சாத்தனூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு... தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

தொடர் கனமழையால் திருவண்ணாமலை செண்பகத்தோப்பு அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு... ஆரணி கமண்டல நாகநதியில் வெள்ளம் பெருக்கெடுப்பதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை...

சாத்தனூர் அணை
சாத்தனூர் அணை கோப்புப்படம்

கொள்முதல் செய்யப்படாத நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு... போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை என வலியுறுத்தல்...

அதிமுக ஆட்சியில் நடவு நடும் அளவுக்கு நெல் முளைத்திருந்ததாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விமர்சனம்... அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் அதிக அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும் விளக்கம் ....

2025ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருது தேன்மொழி செளந்தரராஜனுக்கு அறிவிப்பு... ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் கிடைக்க போராடி வருபவர் என தமிழக அரசு புகழாரம்...

தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான நான்காவது ரயில் பாதைக்கு மத்திய அரசு ஒப்புதல்... 30 புள்ளி 2 கிலோமீட்டர் பாதைக்கு 757 கோடியே 18 லட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பீடு...

மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆலோசனை... வாக்காளர் பட்டியல் சிறப்புத்திருத்தம் மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்...

மின்சார ரயில் சேவை ரத்து
மின்சார ரயில் சேவை ரத்துமுகநூல்

பிஹாரில் எதிர்க்கட்சிகளின் 'மகாபந்தன்' கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகிறார் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ்... லாலு பிரசாத் உடன் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு...

கூட்டணியையே ஒற்றுமையாக கட்டிக்காக்க முடியாதவர்கள் பிஹாரில் எப்படி நல்லாட்சி தர முடியும்... இந்தியா கூட்டணி குழப்பங்களை சுட்டிக்காட்டி மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் கேள்வி...

சத் பூஜையையொட்டி சொந்த ஊருக்கு செல்வதற்காக பஞ்சாப்பின் ஜலந்தர் ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்... ரயில் பெட்டியின் கதவை உடைத்து திறக்க முயற்சித்ததால் பரபரப்பு...

உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.... கட்டடத்தில் சிக்கியிருந்த 20 குடும்பங்கள் பாதுகாப்பாக மீட்பு..

வெனிசுலாவில் சிறிய ரக விமானம் கீழே விழுந்து விபத்து... 2 விமானிகள் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு...

பிஹார் தேர்தல் ஏன் முக்கியம்
பிஹார் தேர்தல் ஏன் முக்கியம்web

பெரு தலைநகர் லிமாவில் வன்முறைப் போராட்டங்கள் அதிகரித்ததை தொடர்ந்து அவசரநிலை பிரகடனம்... ராணுவத்தினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு....

இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 50இல் இருந்து 15% ஆக அமெரிக்கா குறைக்கும் எனத் தகவல்.... சில நாட்களில் வணிக ஒப்பந்தத்தை முடிக்க இரு தரப்பும் தீவிரம்...

ஒரே நாளில் சவரனுக்கு 3 ஆயிரத்து 680 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.... ஒரு சவரன் 92 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை....

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அசத்தல்... 69 பந்துகளில் சதம் விளாசி, உலகக்கோப்பை தொடரில் அதிவேக சதம் அடித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் ஆஷ்லே கார்ட்னர்...

அடிலெய்ட் மைதானத்தில் அசத்துமா இந்திய அணி?... ஆஸ்திரேலியாவுடன் 2ஆவது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com