HEADLINES | 11 மாவட்டங்களுக்கு கனமழையால் விடுமுறை முதல் வலுப்பெற்ற வடகிழக்கு பருவமழை வரை!
புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்..
திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, காஞ்சிபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...
சென்னை, புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு... புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...
தமிழகத்தில் தீவிரம் அடைந்தது வடகிழக்கு பருவமழை... வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டிய கனமழை... ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி...
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு கனமழை பெய்தது... பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது...
கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு மூன்று மணி நேரத்துக்கும் மேலாக கனமழை... காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சூழல்...
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நேற்று நள்ளிரவு வரை இடைவிடாது மழை... தொடர்ச்சியான மழையால் சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது...
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேற்று அதிகாலை முதல் இடைவிடாது மழை... பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு...
மதுரையில் மழை பாதித்த பகுதிகளில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு... தேங்கிய நீரை உடனடியாக வெளியேற்ற ஆட்சியர் உத்தரவு...
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் கூடுதலாக திறப்பு... காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்...
வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு... அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை...
கே.ஆர்.பி. அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்... கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...
சென்னை புழல், நாராயணபுரம், பருத்திப்பட்டு, திருநின்றவூர் ஏரிகளிலிருந்து தண்ணீர் திறப்பு... தொடர் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை...
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து கண்காணிப்பு அதிகாரிகளாக 12 பேரை நியமித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்... தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்...
களத்தில் கண் துஞ்சாமல் செயல்பட்டு மக்களை காப்போம்... நெல் கொள்முதல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவும் ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு...
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை... தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல்...
மதுரை ரயில் நிலையத்தில் திரண்ட பயணிகள்... தீபாவளி தொடர் விடுமுறை முடிந்ததை தொடர்ந்து ஊர் திரும்ப குவிந்தனர்...
தீபாவளி விடுமுறை முடிந்து அதிகளவில் சென்னைக்கு திரும்பிய மக்கள்... விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கூடுதல் வழிகள் திறக்கப்பட்டு வாகனங்கள் செல்ல ஏற்பாடு... ((தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கூடுதல் வழிகள் திறப்பு))
தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு திரும்பிய மக்கள்... புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்..
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்... உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாறும் என்றும் நம்பிக்கை...
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பான அரசின் விளக்கத்தை ட்ரம்ப் கண்டுகொள்ளவே இல்லை... வெளியுறவுத் துறையின் தோல்வியை காட்டுவதாக காங்கிரஸ் விமர்சனம்...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 440 ரூபாய் குறைவு... சவரன் 96 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பிய நிருபர்... வெள்ளை மாளிகை அதிகாரி தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தியதாக புகார்...
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் சனா டகாய்ச்சி... நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் பெற்றதால் வெற்றி...
அமெரிக்காவுடன் வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் இறக்குமதி வரி 155% வரை அதிகரிக்கப்படும்... சீனாவுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்தார் ட்ரம்ப்...
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை நடந்திராத நிகழ்வு... 50 ஓவர்களையும் சுழற்பந்தாக வீசிய வெஸ்ட் இண்டீசின் வித்தியாசமான முடிவு...