அக்டோபர் 18 காலை தலைப்பு செய்திகள்
அக்டோபர் 18 காலை தலைப்பு செய்திகள்pt

HEADLINES | 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முதல் அமைச்சரான ஜடேஜா மனைவி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளில் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முதல் அமைச்சரான ஜடேஜா மனைவி வரை செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன.
Published on
Summary

புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்..

  • நீலகிரி, கோவை, திருப்பூர் உள்பட 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் கணிப்பு...

  • தூத்துக்குடி, விருதுநகர், தேனி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை... தென்காசியில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு...

  • சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை... வேளச்சேரியில் தாழ்வான இடங்களில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி...

  • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நீடிக்கும் மழை... தீபாவளி பண்டிகைக்கான விற்பனை பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் கவலை...

  • தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்... கிளாம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் அலைமோதிய கூட்டம்...

  • சாதி ஆணவக் கொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற நீதியரசர் கே.என்.பாஷா தலைமையில் ஆணையம்... ஆணையத்தின் பரிந்துரைப்படி தனிச்சட்டம் இயற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி...

  • சொந்த ஊர் செல்லும் மக்களால் நிரம்பி வழிந்த தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள்... முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம்பிடிக்க முண்டியடித்த பயணிகள்...

  • தீபாவளியையொட்டி தலைநகர் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்... சென்னை ஜிஎஸ்டி சாலையிலும் அணிவகுத்த வாகனங்கள்...

  • சென்னை தியாகராய நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் களைகட்டும் தீபாவளி ஷாப்பிங்... கொட்டும் மழையிலும் பட்டாசுகளை வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்...

  • தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய் கிழமை விடுமுறை அறிவித்தது தமிழக அரசு... பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்களின் வசதிக்காக ஏற்பாடு...

  • மக்களுக்கு திமுக அரசு அல்வா கொடுத்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு... திமுக வாக்குறுதிகள் அச்சிடப்பட்ட காலி அல்வா பாக்கெட்டுகளை விநியோகித்து விமர்சனம்...

  • எதிர்க்கட்சி தலைவர் கே.பழனிசாமியின் ‘அல்வா’ புகாருக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்... அதிமுகவை திருட்டுக் கடையாக மாற்றிவிட்டதாக விமர்சனம்...

  • மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் உற்சாகம்... வானவேடிக்கை நிகழ்வை கண்டு ரசித்த தாக்கரே குடும்பத்தினர்...

  • உத்தர பிரதேசத்தில் களைக்கட்டிய தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்... இரவை பகலாக்கிய வானவேடிக்கைநிகழ்வு...

  • டெல்லியில் பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா சந்திப்பு... மனிதாபிமான முறையில் மீனவர் விவகாரத்தை கையாள வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்...

  • பிஹார் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு... 121 தொகுதிகளில் போட்டியிட ஆயிரத்து250க்கும் மேற்பட்டோர் வேட்புமனுதாக்கல்...

பிஹார் தேர்தல் ஏன் முக்கியம்
பிஹார் தேர்தல் ஏன் முக்கியம்web
  • மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட வழக்கு... நவம்பர் 21ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு...

  • உலக நாடுகளில் நிகழும் போர்களை நிறுத்துவதை தாம் விரும்புவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு... பல்லாயிரக்கணக்கான உயிர்களைகாப்பாற்றியதை பெருமையாகநினைப்பதாகவும் கருத்து...

  • உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்த ஹமாஸ் அமைப்பு... டெல் அவிவ் நகருக்கு கொண்டுவரப்பட்ட உடல்களுக்கு இஸ்ரேல் படையினர் இறுதி மரியாதை...

  • ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியது ஒரு சவரன் ஆபரண தங்கம்... சென்னையில் சவரனுக்கு 2ஆயிரத்து 400 ரூபாய் அதிகரித்து 97ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை...

  • குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது.. கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா 25  அமைச்சர்களில் ஒருவராக நியமனம்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com