HEADLINES | இன்று நாடு தழுவிய வேலைநிறுத்த அழைப்பு To சீனாவில் அருணாசல பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்னை!
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம், சீனாவின் ஷாங்காயில் அருணாசல பிரதேச பெண் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம், அருணாசல பிரதேசத்தை உரிமைகோரும் சீனா, அதிமுகவுக்காக 50 ஆண்டு காலம் உழைத்ததற்கு கிடைத்த பரிசு நீக்கம் என செங்கோட்டையன் வேதனை, இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு, இந்திய வான்பரப்பை சில மணி நேரம் திணறடித்த எத்தியோப்பியா எரிமலை சாம்பல், தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 600 ரூபாய் உயர்வு.. உள்ளிட்ட பல்வேறு செய்திகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்...
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்... ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை தொடரும்...
தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு இலங்கை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...
சீனாவின் ஷாங்காயில் அருணாசல பிரதேச பெண் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம்... சர்வதேச விமானப் பயணம் தொடர்பான பல்வேறு உடன்படிக்கைகளை சீனா மீறியுள்ளதாக இந்தியா குற்றம்சாட்டு...
அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என இந்தியா திட்டவட்டம்.... சீனா எவ்வளவு மறுத்தாலும் உண்மை மாறாது என்றும் கருத்து...
நாட்டில் அமைதி நிலவுவது மிகவும் முக்கியம்; ஆனால் பாதுகாப்பில் சமரசம் செய்துக் கொள்ள முடியாது... ஹரியானா குருஷேத்ராவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு...
அரசமைப்பு சாசனம் உருவான நாளில் இருந்தே அதையும் அம்பேத்கரையும் கடுமையாக எதிர்த்து வருகிறது ஆர்எஸ்எஸ்... அரசமைப்பு சாசனம் ஏற்கப்பட்டதின் 76ஆவது நிறைவு நாளில் காங்கிரஸ் விமர்சனம்...
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்... ஆசிரியர்களை பாதுகாப்பதுடன், குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வலியுறுத்தல்....
அதிமுக ஓட்டுகளை திமுகவினர் நீக்காமல் பார்த்துகொள்ள வேண்டும்.... மாவட்ட செயலர் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவுறுத்தல்.....
அதிமுகவுக்காக 50 ஆண்டு காலம் உழைத்த தனக்கு, கொடுக்கப்பட்ட பரிசு நீக்கம் என செங்கோட்டையன் வேதனை... தவெகவில் இணைவது தொடர்பான கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காமல் பதில்...
விஜயின் தவெகவில் இணைகிறாரா செங்கோட்டையன் ?.... செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம்....
செங்கோட்டையன் என்ன செய்கிறார் என்பதை பார்ப்பது தங்கள் வேலையல்ல என தமிழிசை விளக்கம்... ஜார்ஜ் கோட்டையை பிடிக்கவே வேலை செய்வதாகவும் பதில்...
கூட்டணி குறித்து டிசம்பர் 30ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் முடிவு... பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு...
வெறும் ராஜ்ய சபா சீட்டுக்காக கூட்டணி அமைக்க மாட்டோம்... மக்கள் விரும்பும் கூட்டணியைஅமைப்போம் என தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா பேட்டி...
பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்... ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டாக அறிவிப்பு...
இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு... மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடக்கும் 12 மாநிலங்களில் இதுவரை 50 கோடி பேருக்கு எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம்... தமிழ்நாட்டில் 6 கோடியே 16 லட்சம் பேருக்கு படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்...
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட 10 நாட்களில் மட்டும் சுமார் எட்டரை லட்சம் பக்தர்கள் தரிசனம்... ஸ்பாட் புக்கிக் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் நெரிசலற்ற தரிசனம் தொடர்வதாக தேவஸ்வம் போர்டு தகவல்...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலம்... தனித்தனி வாகனத்தில் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தருளிய பஞ்சமூர்த்திகள்....
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்.... நெல்லை, விழுப்புரம், சென்னை, தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு...
அயோத்தி ராமர் கோயிலில் விவாஹ பஞ்சமி பூஜை, காவி நிறக் கொடியேற்றம் கோலாகலம்... கொண்டாட்டத்தில் திளைத்த பக்தர்கள், லேசர் விளக்குகளால் ஒளிர்ந்த கோயில்...
இந்திய வான்பரப்பை சில மணி நேரம் திணறடித்த எத்தியோப்பியா எரிமலை சாம்பல்... முன்னெச்சரிக்கையாக ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், பெரும் அச்சுறுத்தல் தவிர்ப்பு...
மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் நாடுகளை புரட்டிப்போட்ட பருவமழை... கடும் வெள்ளப்பெருக்கால் தண்ணீரில் மிதக்கும் நகரங்கள்...
அடுத்தாண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு... பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்...
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு... “அடியே அலையே” பாடலை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் குரலில் ‘ரத்னமாலா’ பாடல்...
தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 600 ரூபாய் உயர்வு.. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 93ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை..
வெள்ளி விலை கிலோவுக்கு 3ஆயிரம் ரூபாய் உயர்வு.. ஒரு கிராம் வெள்ளி 174 ரூபாய்க்கு விற்பனை..

