HEADLINES| பிஹாரில் இன்று வாக்கு எண்ணிக்கை முதல் இந்தியா-தென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடக்கம் வரை!
புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்..
தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு...புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும்பரவலாக மழை பெய்யக்கூடும் எனஅறிவிப்பு...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று லேசான மழை பெய்யும்... அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என வானிலை மையம் தகவல்...
தமிழகத்தில் மீண்டும் தீவிரமடைகிறது வடகிழக்கு பருவமழை... 16ஆம் தேதி முதல் கனமழை பெய்யக்கூடுமென வானிலை மையம் கணிப்பு...
வரும் 21ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் கணிப்பு...
தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை... விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல்...
சென்னையில் 95 ஆயிரம் ரூபாயைக் கடந்தது தங்கம் விலை... ஒரே நாளில் சவரனுக்கு 2 ஆயிரத்து 400 ரூபாய் அதிகரிப்பு...
பிஹார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறப் போவது யார்?... மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே இன்று வாக்கு எண்ணிக்கை...
பிஹாரில் 46 மையங்களில் வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடுகள்... வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு...
பிஹாரில் வாக்கு எண்ணிக்கையில் நடுநிலையோடு செயல்பட வேண்டும்... தேர்தல் ஆணையத்திற்கு தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்...
பிஹார் வாக்கு எண்ணிக்கை முடிவு நியாயமாக இல்லாவிட்டால் மக்கள் வீதியில் இறங்கி போராட நேரிடும்... ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சுனில் சிங் எச்சரிக்கை...
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு.... ஜூலை 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு...
போடிநாயக்கனூர், சாத்தூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு... தகுதியுள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க உதவ வேண்டும் என அறிவுறுத்தல்....
மேகதாது அணைக்கான கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு தடையில்லை... தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்...
மேகதாது அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை என அமைச்சர் துரைமுருகன் விளக்கம்.... காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் உரிமையை தமிழக அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்றும் உறுதி....
மேகதாது வழக்கில் திமுக அரசு கடுமையான வாதங்களை முன்வைக்கத் தவறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு... மேகதாது உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய அன்புமணி வலியுறுத்தல்...
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி என்பதற்காக தமிழக உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்... மேகதாது வழக்கு குறித்து செல்வப்பெருந்தகை கருத்து...
புதுக்கோட்டை அருகே சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம் அகற்றம்... விமான பாகங்கள் லாரி மூலம் சேலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது...
எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்... சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தீவிரமெடுக்கும் புலானாய்வு அமைப்பு விசாரணை... தேடப்பட்டு வந்த மற்றொரு கார் அல்- ஃபலா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிப்பு...
கடலூர் அருகே ஊருக்குள் புகுந்த முதலை தாக்கியதில் இருவர் படுகாயம்... கிராம மக்களின் உதவியுடன் முதலையை பிடித்த தீயணைப்பு படை வீரர்கள்...
அமெரிக்காவில் 43 நாட்கள் நீடித்த அரசு முடக்கத்திற்கு முடிவு... செலவீன மசோதாவில் ட்ரம்ப் கையெழுத்திட்ட நிலையில், மீண்டும் பணிக்கு திரும்பும் அரசு ஊழியர்கள்...
மெக்சிகோவில் கல்வி நிதியை அதிகரிக்கக் கோரி ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு... கண்ணீர்புகை குண்டுகள் வீசி கூட்டத்தை கலைத்த காவல்துறை...
இங்கிலாந்தில் களைகட்டத் தொடங்கிய கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்... பிரசித்தி பெற்ற கியூ கார்டன் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு...
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்... நடப்பு உலக சாம்பியனை எதிர்கொள்ள தயாராகி வரும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய படை...
ஏடிபி டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் அல்காரஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்... மற்றொரு ஆட்டத்தில், அமெரிக்க வீரரை வீழ்த்தி அலெக்ஸ் டி மினார் வெற்றி...

