HEADLINES| தமிழகத்தில் SIR பணிகள் இன்று தொடக்கம் To கோவை மாணவி வழக்கில் 3 பேர் சுட்டுப்பிடிப்பு!
புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்..
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூன்று பேரை சுட்டுப் பிடித்த போலீஸார்... காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது துப்பாக்கிச்சூடு...
பிடிபட்டவர்கள் மூன்று பேரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்... கொலை உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் இருப்பதாக காவல் துறை தகவல்...
தமிழகத்தில் காவல் துறை உள்ளதா என கோவை சம்பவத்தை குறிப்பிட்டு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி... பெண்கள் பாதுகாப்பை திமுக அரசு குழிதோண்டி புதைத்துவிட்டதாகவும் கண்டனம்...
கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்... பெண்கள் வெளியே தலைகாட்டவே அஞ்சுவதாக விமர்சனம்...
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்... தீப்பந்தம் ஏந்தி முழக்கங்களை எழுப்பிய தொண்டர்கள்...
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திற்கு அருகே சட்டவிரோதமாக மதுபான பார் இயங்கியதாக புகார்... மதுபாட்டில்களை கைப்பற்றி உடைத்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்...
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் இன்று தொடக்கம்... 234 தொகுதிகளிலும் தேவையான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்...
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு... முகவரிகளை தரநிலைப்படுத்தல் தொடர்பான விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்...
சீராய்வு என்ற பெயரில் சதிச்செயலை செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு... தேர்தலை மனதில் கொண்டு வாக்காளர் சிறப்பு திருத்தப் பட்டியலை ஆணையம் மேற்கொள்வதாகவும் பேச்சு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு... தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் திமுக கோரிக்கை...
எஸ்ஐஆர் குறித்து அச்சப்பட தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி... அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏசத்யா உள்ளிட்டோர் தொடர்ந்தவழக்கில் தேர்தல் ஆணையம் பதில்...
தமிழ்நாட்டில் வெப்பநிலை 4 செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும்... 9ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
சென்னை கோயம்பேடு, ஆவடி, பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை... சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீர் மழையால் குளுமையான சூழல்...
கரூர் துயரம் தொடர்பாக சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் விசாரணை நடத்திய சிபிஐ... புகைப்படங்கள், சிசிடிவி ஆதாரங்களை அதிகாரிகள் கேட்டதாக சிடிஆர் நிர்மல்குமார் விளக்கம்...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்... தூதரகரீதியான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்...
பிஹாரில் முதல் கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு... ஆறாம் தேதி வாக்குப்பதிவு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்...
பிஹாரில் நக்சல் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டுள்ளதால் மாலை 3 மணிக்கு மேலும் வாக்கு செலுத்தும் வகையில் பாதுகாப்பான சூழல்... தேர்தல் பரப்புரையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்...
பிஹாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் ஜங்கிள் ராஜ் என மோடி, நிதிஷ்குமார் பேசுவது ஆச்சரியம்... காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே விமர்சனம்...
குஜராத்தில் தொழில்நுட்பம், பிஹாரில் துப்பாக்கி பற்றி பேசுகிறார் பிரதமர் மோடி... இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேர்வு குறித்த விமர்சனத்திற்கு தேஜஸ்வி யாதவ் பதிலடி...
அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்... வங்கி மோசடி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை...
14 முதல் 18 வயது இளைஞர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை கோரிய வழக்கை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு... நேபாளத்தில் சமூக வலைதள தடை என்ன விளைவை ஏற்படுத்தியது என்று பார்த்தீர்களா என நீதிபதிகள் கேள்வி...
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா... ஆப்கான் அமைச்சர் மல்லாவி அமீர்கானை தொடர்பு கொண்டு நிலவரங்களை கேட்டறிந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்...
கட்டுக்கடங்காத கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் உலக நாடுகள்... ஜிடிபியில் 94 புள்ளி 7 சதவீதமாக கடன்கள் அதிகரிப்பு...
கடந்த 10 மாதங்களில் உலகெங்கும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் நீக்கம்... ஏஐ தொழில்நுட்ப பயன்பாடு எதிரொலி என ஆய்வறிக்கையில் தகவல்...

