மார்ச் 6 காலைத் தலைப்புச் செய்திகள்
மார்ச் 6 காலைத் தலைப்புச் செய்திகள்web

Headlines| தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம் to இங்கிலாந்தை வீழ்த்தி ஃபைனல் சென்றது இந்தியா!

புதியதலைமுறையின் இன்றைய காலைத் தலைப்புச் செய்திகளானது, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பணிமாற்றம் முதல் இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற இந்திய அணி வரை விவரிக்கிறது..
Published on

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. மாற்றம்... கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்அர்லேகருக்கு கூடுதல் பொறுப்புவழங்கி குடியரசுத்தலைவர் உத்தரவு...

தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்குவங்க ஆளுநராக நியமனம்... அனந்த போஸ் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், குடியரசுத்தலைவர் உத்தரவு...

மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட விவகாரம்... தன்னிடம் உள்துறை அமைச்சகம்கலந்தாலோசிக்கவில்லை என முதல்வர்மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு...

பிஹார், மஹாராஷ்டிரா, தெலங்கானா, இமாச்சல் பிரதேசம், நாகாலாந்து மாநில ஆளுநர்கள் மாற்றம்... டெல்லி மற்றும் லடாக் துணைநிலை ஆளுநர்களும் மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு...

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இன்று பதவியேற்பு... சென்னை மக்கள் மாளிகையில் பதவிப்பிரமாணம் நிகழ்ச்சி நடக்கும் என அறிவிப்பு...

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுகவின் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்... காங்கிரஸ் தரப்பில் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீசும் மனு தாக்கல் செய்தனர்...

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவிமுகநூல்

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்... பாமக தலைவர் அன்புமணி ராமதாசும் வேட்பு மனு தாக்கல் செய்தார்...

மாநிலங்களவை தேர்தலில் திடீர் திருப்பமாக பாமக நிறுவனர் ராமதாஸ் உதவியாளர் ப.சுவாமிநாதன் போட்டி... அதிமுக ஆதரவுடன் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் ராமதாஸ் தரப்பும் வேட்புமனு...

தமிழகத்தில் காலியாக இருக்கும் மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் போட்டியிட இதுவரை 12 பேர் மனு தாக்கல்... வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடக்கும் என அறிவிப்பு...

தொடக்கம் முதல் கட்சியிலுள்ள சுதீஷ், எம்பி பதவிக்கு தகுதியற்றவரா என பிரேமலதா கேள்வி... தேமுதிகவிலுள்ள லட்சக்கணக்கான தொண்டர்களில் ஒருவர் எல்.கே.சுதீஷ் என்றும் பேட்டி...

பெண்களின் முன்னேற்றமே திராவிட மாடல் ஆட்சியின் வெற்றி என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு... மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படுமெனவும் உறுதி...

சினிமா தயாரிப்பாளர் இல்லத் திருமண விழாவில் ஒன்றாக பங்கேற்ற விஜய் - த்ரிஷா... சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்...

vijay and trisha attended the wedding ceremony goes to video viral
vijay, trishax page

7ஆவது நாளாக நீடிக்கும் இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல்... ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொள்வதால் வளைகுடா நாடுகளில் தொடரும் பதற்றம்...

ஈரானின் கடற்படை மற்றும் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல்... பி-52 விமானம் மூலம் தாக்குதல் நடத்திய காட்சிகளை வெளியிட்ட அமெரிக்கா...

ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 230 ஆக அதிகரிப்பு... படுகாயம் அடைந்தோருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை...

துபாய், கத்தாரை தொடர்ந்து அஜர்பைஜானிலும் ஈரான் தாக்குதல்... நக்சிவன் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் காயம்...

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உச்சகட்டத்தை எட்டிய போர்ப் பதற்றம்... பாதுகாப்பான இடங்களை தேடி ஆயிரக்கணக்கான மக்கள் பயணம்...

சக்திவாய்ந்த அணுகுண்டு ஏந்திச்செல்லும் மினிட்மேன் 3ஏவுகணையை பரிசோதித்ததுஅமெரிக்கா...மேற்காசிய போர் தீவிரமடையும்நிலையில் கவனம் பெறும் நடவடிக்கை...

ஈரான் மீது தாக்குதல்
ஈரான் மீது தாக்குதல்web

ஈரானின் ராணுவம், காவல் படைகளை சரணடையுமாறு மீண்டும் வலியுறுத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்... ஈரானிய மக்களுக்காக துணை நிற்காவிட்டால் கொல்லப்படுவீர்கள் எனவும் எச்சரிக்கை...

ஈரானின் புதிய உச்சத் தலைவரை தேர்வு செய்வதில் அமெரிக்காவின் பங்கு இருக்க வேண்டுமென அதிபர் ட்ரம்ப் பேச்சு... வெனிசுலாவைப் போல் ஈரானின் அடுத்த தலைவரும் தங்களுக்கு ஆதரவுதெரிவிப்பவராக இருக்கவும்வலியுறுத்தல்...

ஈரானுடனான போரில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உதவ தயார்... உக்ரைன் அதிபர் விளாடிமர் ஜெலன்ஸ்கி பேச்சு...

இலங்கை கடற்பரப்பில் தங்கள் போர்க்கப்பலை வீழ்த்தியதற்காக பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என ஈரான் எச்சரிக்கை... அமெரிக்கா வருந்தும் நிலை வரும் என்றும் ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அராக்ச்சி அறிவிப்பு...

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவில் மூழ்கடிக்கப்பட்ட ஈரான் போர்க் கப்பல்... அவசர அழைப்பை ஏற்று மீட்பு பணியில் இந்திய கடற்படை உதவுவதாக மத்திய அரசு விளக்கம்...

இந்தியாவுக்கு வலிமையுடன் வழிநடத்தும் பிரதமர் தேவை என ராகுல் காந்தி கருத்து... இந்திய பெருங்கடலில் ஈரான் கப்பலைஅமெரிக்கா தாக்கிய விவகாரத்தில்பிரதமர் மவுனம் காப்பதாகவும்விமர்சனம்...

US launched its first submarine attack against Iran since World War II
US launched its first submarine attack against Iran since World War IIweb

ஈரானை தாக்குவதற்கு இந்தியாவின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை பயன்படுத்தியதாக வெளியான தகவல்... அமெரிக்க நிறுவனத்தின் செய்தியை திட்டவட்டமாக மறுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்...

மேற்காசியா மற்றும் உக்ரைனில் நடந்து வரும் போர்களுக்கு விரைந்து முடிவு கட்ட பிரதமர் மோடி வலியுறுத்தல்... ராணுவ நடவடிக்கைகள் மூலம் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காணமுடியாது என அறிக்கை...

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு... மேற்காசியாவில் நடந்துவரும் போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை...

போரில் கொல்லப்பட்ட ஈரான் உயர் தலைவர் காமேனிக்கு இந்தியா இரங்கல்... டெல்லி ஈரான் தூதரகத்தில் உள்ள புத்தகத்தில் இரங்கலை பதிவு செய்தார் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி...

இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் எதிரொலியால் வளைகுடா வான்பரப்பை தவிர்க்கும் விமானங்கள்... மாற்று பாதையில் செல்வதால் விமானக் கட்டணங்கள் பன்மடங்கு உயர்வு...

வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இதுவரை 281 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டதாக மத்திய அரசு தகவல்... ஆயிரத்து 461 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டதாகவும் அறிக்கை...

இண்டிகோ விமானம்
இண்டிகோ விமானம்pt

டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 8 இந்திய நகரங்களுக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கம்... ஐக்கிய அரபு அமீரகத்தின் எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு...

அசாம் அருகே மாயமான இந்திய விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு... கர்பி ஆங்லாங் ((Karbi Anglong)) மலைப்பகுதியில் மீட்பு மற்றும் தேடுதல் பணி நடந்து வருவதாகவும் தகவல்...

டி20 உலகக் கோப்பையில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்திய அணி... அரையிறுதியில் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி...

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார்... முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யஉள்ள நிலையில் 20 ஆண்டுகளாகஆதரவு கொடுத்ததற்காக பிஹார்மக்களுக்கு நன்றி தெரிவித்தார்...

பிஹாரில் முதல்முறையாக பாஜகவை சேர்ந்தவர் முதல்வராக உள்ளதாக தகவல்... மத்திய இணையமைச்சர் நித்யானந்த ராய், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி உள்ளிட்ட பெயர்கள் பரிசீலனை...

பிஹாரில் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலைமை தமிழ்நாட்டில் எடப்பாடி கே. பழனிசாமிக்கு ஏற்பட்டுவிடக் கூடாது... பாஜக இல்லாத சட்டமன்றம் அமைய வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் கருத்து...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com