மார்ச் 5 காலைத் தலைப்புச் செய்திகள்
மார்ச் 5 காலைத் தலைப்புச் செய்திகள்web

Headlines| 2-ம் உலகப்போருக்கு பின் அமெரிக்கா கையிலெடுத்த ஆயுதம் to இன்று இந்தியா-இங்கிலாந்து மோதல்!

புதியதலைமுறையின் இன்றைய காலைத் தலைப்புச் செய்திகளானது, இரண்டாம் உலகப்போருக்கு பின் அமெரிக்கா கையிலெடுத்த ஆயுதம் முதல் இன்று நடக்கும் அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா வரை விவரிக்கிறது..
Published on

இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க கடற்படை... 2ஆம் உலகப்போருக்கு பிறகு முதல்முறையாக நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதன் வீடியோ வெளியீடு...

ஈரான் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 87 பேரின் உடல்களை மீட்ட இலங்கை கடற்படை... 30க்கும் மேற்பட்டோர் மீட்பு, 60க்கும் மேற்பட்டோர் மாயமானதாக தகவல்....

ஹோர்முஸ் நீரிணையை எந்த கப்பல் கடந்தாலும் தாக்குவோம் என ஈரான் மிரட்டல்... நீரிணை பகுதியை கப்பல்கள் கடக்க பாதுகாப்பு அளிப்போம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில் எச்சரிக்கை...

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஃபுஜைரா துறைமுகத்தில் எண்ணெய் சேமிப்புக்கிடங்குகள் அருகே ஈரான் தாக்குதல்... ஹோர்முஸ் நீரிணை நுழைவாயில் பகுதியில் உள்ள இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம்...

சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் இரண்டாவது முறையாக தாக்குதல்... தொடர்ந்து எண்ணெய் வளங்களை குறிவைக்கும் ஈரானால் உலகளவில் பதற்றமான சூழல்...

மேற்காசியாவில் போர் நீடிப்பதன் எதிரொலி கச்சா எண்ணெய் விலை 20 மாதங்களில் இல்லாத அளவு உயர்ந்து 84 டாலர்களை தாண்டியது...

ஈரான் மீது தாக்குதல்
ஈரான் மீது தாக்குதல்

ஹோர்முஸ் நீர்வழிப்பாதை மூடலால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் சூழல்... இந்தியாவிற்கு சுமார் 95 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை அனுப்புவதற்கு முன்வந்த ரஷ்யா...

உயர் தலைவர் காமேனியின் இறுதிச்சடங்கை ஒத்திவைத்தது ஈரான்... இஸ்ரேல்-அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதல் தீவிரமாக தொடர்வதால் முடிவு...

கொல்லப்பட்ட காமேனியின் மகன் மோஜ்தபா, ஈரானின் புதிய உயர் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக தகவல்... ஈரானுக்கு யார் புதிய உயர் தலைவராக வந்தாலும் அழித்துவிடுவோம் என இஸ்ரேல் எச்சரிக்கை...

உலகில் உள்ள முன்னணி ஆயுத தயாரிப்பாளர்களுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்... ஈரானுடனான மோதல் நீடிப்பதால், நவீன ஆயுதங்களை கொள்முதல் செய்ய அமெரிக்கா திட்டம் என தகவல்...

லெபனான் நாட்டு எல்லையில் அதிகளவில் படைகளை குவிக்கும் இஸ்ரேல் ராணுவம்... ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்தும் முயற்சியால் தொடரும் பதற்றம்...

லெபனானில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்... இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் உடமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு படையெடுப்பு...

ஈரான் - ஹார்முஸ் நீரிணை
ஈரான் - ஹார்முஸ் நீரிணை

வளைகுடா பிராந்தியம் உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள்... அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பு...

வளைகுடா நாடுகளில் இருந்து வெளிநாடு சுற்றுலா பயணிகளுக்காக 2ஆவது நாளாக இயக்கப்பட்ட சிறப்பு விமானங்கள்... விமான நிலையங்களில் சொந்தபந்தங்களை கண்ணீருடன் வரவேற்ற உறவுகள்...

துபாயில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல், கடும் நிதி நெருக்கடியை சந்திக்கும் இந்தியர்கள்.... விமான டிக்கெட், தங்குமிட கட்டணம் பல மடங்கு உயர்ந்ததால் அவதி...

ஈரானுடனான போரால் ஏற்பட்ட விமான சேவை தடையால், மாற்று திட்டத்தை கையாளும் ஐக்கிய அரபு அமீரகம்... சவுதி அரேபியா எல்லையில் இருந்து அபுதாபி நகருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்...

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கீடு... ஒப்பந்தம் நல்லபடியாக முடிந்துவிட்டது என்பதை குறிப்பிடும் வகையில் சைகை காட்டிய முதல்வர் ஸ்டாலின்...

கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட கூடுதலாக 3 சீட் பெற்ற காங்கிரஸ்... 2021இல் 25 இடங்களில் போட்டியிட்ட நிலையில் 2026இல் 28 ஆக உயர்வு...

DMK Seat Sharing Finalised 28+1 Seats Allotted to Congress
காங்கிரஸ், திமுகட்விட்டர்

திமுகவுடனான தொகுதி பங்கீடு மனநிறைவும், மகிழ்ச்சியும் அளிக்கிறது... ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு செல்வப்பெருந்தகை பேட்டி...

இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒருநாள் சாத்தியமாகும் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவு... ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை திமுக ஏற்காததால் விரக்தியில் இருப்பதாக பலரும் விமர்சனம்...

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது திமுக தலைமை... திருச்சி சிவா, கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிப்பு...

அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் தம்பிதுரை மீண்டும் போட்டி... வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக தலைமை...

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு... பாமக சார்பில் அன்புமணி மீண்டும் போட்டியிட வாய்ப்பு...

திமுக - இந்திய கம்யூனிஸ்ட் இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை.... தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மீண்டும் பேசுவோம் என மு. வீரபாண்டியன் அறிவிப்பு...

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்கோப்பு படம்

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் இடையே பேச்சுவார்த்தை... தொகுதி எண்ணிக்கை, போட்டியிடும் சின்னம் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என அறிவிப்பு...

தமிழ்நாடு, புதுச்சேரியில் தேமுதிகவுக்கு முரசு சின்னம்.... புதுச்சேரியிலும் நாம் தமிழருக்கு விவசாயி சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்...

திருச்சி கோட்ட ரயில்வே அலுவலகத்தில் சர்ச்சைக்குரிய இந்தி பெயர் நீக்கம்.... கடும் எதிர்ப்பு எழுந்ததால், சர்ச்சைக்குரிய எழுத்துக்களுடன், 3 மொழிகளில் இருந்த பெயர்களையும் மொத்தமாக அகற்றியது ரயில்வே....

அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல; ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்... திருச்சி ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் சர்ச்சைக்குரிய இந்தி வார்த்தைகள் நீக்கப்பட்ட விவகாரத்தை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு...

சென்னையில் அதிமுக மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை... சட்டமன்ற தேர்தல் பணிகள், தொகுதி நிலவரம் உள்ளிட்டவை தொடர்பாக கருத்து கேட்டதாக தகவல்...

மணல் மற்றும் கனிமவள கொள்ளையால் தமிழகத்தில் தண்ணீர் திவால் ஆகும் நிலையில் உள்ளதாக விஜய் குற்றச்சாட்டு.. டெல்டாகாரன் எனச் சொன்ன முதல்வர் விவசாயிகளுக்காக என்ன செய்தார் என்றும் கேள்வி...

விஜய்
விஜய் Pt web

வெளியே அடித்துக்கொள்கிறார்கள்; உள்ளே தங்களுக்குள் டீலிங் செய்துகொள்கிறார்கள்.... திமுக, அதிமுக மீது விஜய் மறைமுக தாக்கு....

ஜனநாயகன் திரைப்படப் பிரச்சினையில் பட்டும் படாமலும் குரல் கொடுத்ததற்காக நன்றி.. தஞ்சையில் முதல்வரைக் குறிப்பிட்டுப் பேசிய விஜய்...

தஞ்சை செங்கிப்பட்டி கூட்டத்தில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்த தவெக தலைவர் விஜய்...பயிர்க் கடன் தள்ளுபடி, உரத்தட்டுப்பாடுதடுக்கப்படும் என விவசாயிகளுக்குவாக்குறுதி...

விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்கள்... ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி...

மனப்பாடம் செய்து பேசுவதில், கைதேர்ந்தவர் விஜய் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்... விஜய் ஒரு தடவையாவது செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் எனவும் கிண்டல்...

புரட்சி அதிமுக என்ற புதிய கட்சியை தொடங்கினார் பெங்களூரு புகழேந்தி.... புரட்சி என்பது எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் குறிக்கும் என பேட்டி....

திருச்செந்தூர் கோயில் மாசித் திருவிழாவின் நிறைவு நாளில் மலர்க்கேடய சப்பரங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா.... திருத்தணி கோயிலில் விமரிசையாக நடந்த திருவூடல் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்....

சென்னையில் தொடர்ந்து 3ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை... சவரனுக்கு 2ஆயிரத்து 120 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 21ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை...

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதால் பிஹார் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்கிறாரா நிதிஷ் குமார்?.... பாஜகவை சேர்ந்த ஒருவர் பிஹார் முதல்வர் ஆவார் என தகவல்....

மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகிறார் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சரத் பவார்... தங்களது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க காங்கிரஸ், சிவசேனா தலைமை அறிவுறுத்தல்...

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று பொதுத்தேர்தல்... மாணவர் புரட்சியால் பதவி விலகிய கே. பி.ஒலி உட்பட 3 பேர் பிரதமர் பதவிக்கு போட்டி...

சீனாவின் மிக உயர்ந்த அதிகார அமைப்பான தேசிய மக்கள் காங்கிரஸின் வருடாந்திர கூட்டம் இன்று தொடக்கம்... 2 ஆயிரத்து 800 பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டத்திற்காக தயாராகும் பெய்ஜிங் நகரம்...

தங்கம் விலை
தங்கம் விலைpt

பாகிஸ்தானின் இறையாண்மையைப் பலவீனப்படுத்தச் சதி நடப்பதாக அந்நாட்டு அமைச்சர் கவாஜா ஆசிஃப் குற்றச்சாட்டு... இந்தியா, இஸ்ரேல், ஆப்கானிஸ்தான்கூட்டாக செயல்படுவதாகவும் புகார்...

டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது நியூசிலாந்து அணி... அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி...

டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுமா இந்திய அணி... இன்று நடக்கும் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை...

ஐதராபாத் நகரில் பிரம்மாண்டமாக நடந்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமண வரவேற்பு நிகழ்ச்சி... தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள், அரசியல்கட்சியினர் பங்கேற்று புதுமண தம்பதிக்கு வாழ்த்து...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com