Headlines| வேட்பாளர்களை அறிவிக்க உள்ள அரசியல் கட்சிகள் to சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் மூடல்!
தேர்தல் பரப்புரையை திருவாரூரில் தொடங்க திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் திட்டம்... ஏப்ரல் 2இல் தொடங்கி 21ஆம் தேதி வரை தொடர் பரப்புரையில் ஈடுபட உள்ளதாக தகவல்...
திமுக கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படைக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு... உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கருணாஸ் பேட்டி...
திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு... முதல்வர் அறிவிக்கும் தொகுதியில் போட்டியிடுவோம் என தமிமுன் அன்சாரி பேட்டி...
திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு... உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக எஸ்டிபிஐ நிர்வாகி தெகலான் பாகவி அறிவிப்பு...
திமுக கூட்டணியில் தமிழர் தேசம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு... உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக, அக்கட்சியின் தலைவர் செல்வகுமார் பேட்டி...
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை... 10 தொகுதிகளும் எவை என்பது விரைவில் கையெழுத்தாக வாய்ப்பு...
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் என்னென்ன? 40 தொகுதிகள் கொண்ட பட்டியலை திமுகவிடம் அளித்த காங்கிரஸ்...
திமுக கொடுத்த எண்ணிக்கை, சின்னம் தொடர்பாக வருத்தம் உள்ளது... சிரித்துக் கொண்டே அழுவதாக மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் பேட்டி...
திமுக கூட்டணியில் அடுத்தடுத்து குழப்பம்... தொகுதி ஒதுக்கீட்டில் மதிமுகவைத் தொடர்ந்து காங்கிரஸும் அதிருப்தி என தகவல்...
திமுக கூட்டணியிலுள்ள கட்சிகள் முழு சுதந்திரத்துடன் செயல்படுகின்றன... பழனிசாமி சொல்வது போல அடிமையாக நடத்தியிருந்தால் 3 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்திருக்காது என்றும் சிவசங்கர் விளக்கம்...
திமுக கூட்டணியில் நெருடல் என்பதே இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி... நிறைய கட்சிகள் சேர்ந்துள்ளதால் தொகுதிகள் இறுதி செய்யப்படுவதில் தாமதம் என்றும் விளக்கம்...
அதிமுக கூட்டணியில் சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகத்திற்கு ஒரு தொகுதி... மண்ணச்சநல்லூர் அல்லது ஸ்ரீரங்கம் தொகுதியை கேட்டுள்ளதாக பரதன் பேட்டி...
எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் சந்திப்பு... ராஜபாளையத்தில் என்ன சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசனை...
சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட புதிய தமிழகம் கட்சி ஆயத்தமாகி வருகிறது... கேட்கும் தொகுதிகளை தர அதிமுக முன்வந்தால், கூட்டணியில் இணைவது குறித்து பரீசிலிப்போம் என கிருஷ்ணசாமி தகவல்...
தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஜி. கே.வாசனின் முடிவுக்கு எதிர்ப்பு... தமிழ் மாநில காங்கிரஸ் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவர் ராஜினாமா...
சட்டமன்றத் தேர்தலில் திமுக - அதிமுக இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளதாக சீமான் குற்றச்சாட்டு... திமுக அமைச்சர்கள் வெற்றிபெற உதவும் வகையில் அதிமுகவில் தொகுதிப் பங்கீடு நடந்திருப்பதாகவும் சேலம் பரப்புரையில் விமர்சனம்...
பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காத அண்ணாமலை... கோவை சிங்காநல்லூர் தொகுதி ஒதுக்கப்படாதததால் அதிருப்தி என தகவல்...
வரும் தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என வானதி சீனிவாசன் விருப்பம்... போட்டியிடவில்லை என பாஜக தலைமைக்கு கடிதம் எழுதியதாக வெளியான தகவல் குறித்து பதில்...
மாம்பழம் சின்னத்தை முடக்கிவைக்க கோரிய பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பின் மனு தள்ளுபடி... தன்னை பாமக தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்ற ராமதாஸின் கோரிக்கையையும் நிராகரித்தது சென்னை உரிமையியல் நீதிமன்றம்...
மாம்பழம் சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பாரபட்சமானது என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்... ஜனநாயகத்துக்கும் நீதிக்கும் எதிரான செயலை தேர்தல் ஆணையம் செய்துள்ளதாக அறிக்கை...
பெண்களை தரம் தாழ்ந்து பேசியதாக திமுக ஆதரவாளர் பொன்ராஜ் மீது டிஜிபி அலுவலகத்தில் விஜய் புகார்... கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...
திமுகவின் அரவணைப்பில் இருப்பதால் எல்லை கடந்து அநாகரிகமாக பேசி வருகிறார் பொன்ராஜ்... டிஜிபியிடம் அளித்த மனுவில் விஜய் குற்றச்சாட்டு...
சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய தவெக தலைவர் விஜய்... 29ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தகவல்...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலராக இருந்த டி.செல்வம் தவெகவில் இணைந்தார்... சென்னை பனையூரில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் ஐக்கியம்...
சென்னை பெரம்பூரில் விஜய்யின் பரப்புரைக்கு அனுமதி கிடைத்துவிட்டது... 28ஆம் தேதி பரப்புரை நடைபெறும் என ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு...
திமுக கூட்டணியிலிருந்து விலகிய தவாக தலைவர் வேல்முருகன் தலைமையில் உருவானது புதிய அணி... தவெகவுடன் கூட்டணி இல்லை என்றும் வேல்முருகன் அறிவிப்பு...
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனின் பேச்சு அவதூறானது என சிவசங்கர் குற்றச்சாட்டு... கேட்ட இடங்களை தராவிட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா என்றும் கேள்வி...
புதுச்சேரி திமுக - விசிக நிர்வாகிகள் காங்கிரஸ் தலைவர் வீட்டில் காத்துக்கிடக்கின்றனர்... வேறு வழியில்லாததால் 3 தொகுதிகளில் போட்டியிடுவதாக புதிய தலைமுறைக்கு திருமாவளவன் பிரத்யேக பேட்டி...
புதுச்சேரியில் காங்கிரஸின் அணுகுமுறை கூட்டணி வெற்றியையே கேள்விக்குறியாக்குவதாக திருமாவளவன் ஆதங்கம்... உழவர்கரை தொகுதியை விசிகவுக்கு ஒதுக்கிய பிறகும் காங்கிரஸ் வேட்பாளர் மனுவை திரும்பப்பெறாததற்கு அதிருப்தி...
மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியும் புதுச்சேரியில் சீட் தர காங்கிரஸ் மறுத்துவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு... புதுச்சேரி ஏற்பட்டுள்ள கூட்டணி சிக்கலுக்கு காங்கிரஸின் அணுகுமுறையே காரணம் என்றுஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சாடல்...
சைவ, வைணவ சமயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு... முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது உயர் நீதிமன்றம்...
அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் மீதான 2 வழக்குகளை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்... அதிமுக நிர்வாகிகள் அளித்த புகாரில் இரு தரப்பினரும் சமரசம் செய்துகொண்டதால் வழக்கு ரத்து...
இந்தியாவின் மிகப்பெரிய மோசடிக் கட்சி திமுகதான் என பாமக தலைவர் அன்புமணி விமர்சனம்... 13 சதவிகித தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமே இதுவரை நிறைவேற்றியுள்ளதாகவும் குற்றச்சாட்டு...
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் போட்டியிட உள்ளதாக தகவல்... கோவை வடக்கு தொகுதியில் களமிறங்க வானதி சீனிவாசன் திட்டம்...
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவிநாசி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்... நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன், மயிலாப்பூரில்தமிழிசை, விளவங்கோட்டில் விஜயதரணி போட்டியிட வாய்ப்பு...
நயினார் நாகேந்திரனை அமலாக்கத்துறை விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு.. 2024 மக்களவை தேர்தலின் போது ரயிலில் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரத்தை விசாரிக்க வலியுறுத்தல்..
மேற்காசியப் போர் தொடர்பாக இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை... தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிப்பு...
ஹோர்முஸ் நீரிணையில் உள்ள எரிசக்தி வழித்தடத்தை பாதுகாக்க 'ஊர்ஜா சுரக்ஷா' நடவடிக்கை... இந்தியாவின் எரிசக்தித் தேவையை பாதுகாக்க களமிறங்கிய கடற்படை...
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரத்தின் மீது ஈரான் வான்வழித் தாக்குதல்... இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக அமீரகம் தகவல்...
ஈரான் உடனான போரை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தான் முக்கிய இடைத்தரகராக செயல்படுகிறது.. மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் தகவல்...
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை பிடிக்க ட்ரம்ப் தீவிரம்... அமெரிக்காவின் தாக்குதலைஎதிர்கொள்ள ஈரான் ராணுவப் படைகள்குவிப்பு...
போர் நிறுத்த ஒப்பந்தம் கோரி கெஞ்சுகிறது ஈரான்... அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் கருத்து...
ஹோர்முஸ் நீரிணையை முழுவதும் திறப்பதற்கான காலக்கெடுவை, ஏப்ரல் 6ஆம் தேதி வரை நீட்டித்தது அமெரிக்கா... ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதலை, அதுவரை நிறுத்தி வைப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு...
ஈரானியர்கள் மோசமான போராளிகள், ஆனால் பேரம் பேசுவதில் சிறந்தவர்கள்.. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் விமர்சனம்..
ஈரானின் உயர் தலைவராக தான் இருக்க வேண்டுமென்று அந்நாட்டு மக்கள் விரும்புவதாக ட்ரம்ப் பேச்சு... ஈரானின் உயர் தலைவர் பதவி தன்னை தேடிவந்தால் வேண்டாம், சாரி என்று சொல்லிவிடுவேன் எனவும் ட்ரம்ப் கிண்டல்...
அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச அமைதித் திட்டத்தை ஏற்க ஈரான் மறுப்பு... அமெரிக்காவின் திட்டம் ஒருதலைபட்சமானது எனவும் ஈரான் அரசு சாடல்...
எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இயங்கிவந்த உணவகம் மூடல்... உணவு வாங்குவதற்காக நீண்ட தூரம் செல்லும் அவலம்...
வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால், மேலும் பல உணவகங்கள் மூடப்படும் சூழல்... உணவகங்களை நம்பியுள்ள தொழிற்சாலை ஊழியர்கள், பேச்சிலர்ஸ் கடுமையாக பாதிப்பு..
நயாரா நிறுவனம் பெட்ரோல் விலையை 5 ரூபாயும் டீசல் விலையை 3 ரூபாயும் உயர்த்தியது... சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி...
சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஐடி நிறுவனங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு... கான்டீன்களில் சமையல் நிறுத்தப்பட்டு வருவதால் ஊழியர்கள் பாதிப்பு...
பிஎன்ஜி இணைப்புக்கு 3 மாதங்களில் மாறாவிட்டால் எல்பிஜி சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும்... பிஎன்ஜி கேஸ் வசதி இருந்தும் மாறாமல் இருப்பவர்களுக்கு மத்திய அரசு கெடு...
தமிழ்நாட்டில் இன்று முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...
சவரனுக்கு 2 ஆயிரத்து 560 ரூபாய் குறைந்தது ஆபரணத் தங்கத்தின் விலை... ஒரு சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை...
எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பணவீக்க அச்சுறுத்தலே தங்கம் விலை குறையக் காரணம்... அமெரிக்க டாலர் மதிப்பு மற்றும் அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகிதக் கொள்கைகளும் காரணிகள் என நிபுணர்கள் கணிப்பு...
மேற்காசியப் போரின் தாக்கத்தால் தொடர்ந்து சரியும் முட்டை கொள்முதல் விலை... 5 நாட்களில் 60 காசுகள் குறைந்து 3ரூபாய் 85 காசுகளாக நிர்ணயம்..
இந்தியாவுக்கான எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்புகளின் விநியோகத்தை வேகப்படுத்தியது ரஷ்யா... ஏப்ரல் மற்றும் நவம்பரில் இரண்டு எஸ்400 தளவாடங்களும் வந்துசேரும் என தகவல்...
கடைசி நேரத்தில் டிக்கெட் ரத்து செய்பவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் வைக்கும் செக்... 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் பணம் ரீஃபண்ட் செய்யப்படாது என அறிவிப்பு...
2024-25 நிதியாண்டில் தேர்தல் நன்கொடையாக 6 ஆயிரத்து 74 கோடி ரூபாய் பெற்றது பாஜக... இதர கட்சிகளின் மொத்த தொகையை விட 10 மடங்கு அதிக நன்கொடை பெற்று முதலிடம்...
காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்திக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாக டெல்லி மருத்துவமனை அறிக்கை... மருத்துவமனைக்கு சென்று தாயின் நலம் விசாரித்தார் ராகுல் காந்தி...
700 ஆண்டுகள் பழமையான மங்கோலியப் போர்க்கப்பலை கண்டுபிடித்த அகழ்வாராய்ச்சியாளர்கள்... ஜப்பானின் நாகசாகி கடலில் கண்டுபிடிக்கப்பட்ட போர்க்கப்பல்...
ஐபிஎல் டி20 தொடருக்கான 2ஆம் கட்ட அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ... நாளை தொடங்கி மே 24ஆம் தேதி வரை லீக் போட்டிகள் நடைபெறும் என அறிவிப்பு...

