மோடி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - திமுக
மோடி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - திமுகweb

Headlines| ஈரான்போர் தாக்கம் குறித்து மோடி ஆய்வு to திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி!

புதிய தலைமுறையின் இன்றைய தலைப்புச் செய்திகளானது மேற்காசிய போர் தாக்கம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் முதல் திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி வரை விவரிக்கிறது..
Published on

மேற்காசிய போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம்... எரிசக்தி, உரங்கள், மின்சாரம் உள்ளிட்டத் துறைகளின் நிலை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்...

மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு... வேறு வழியில்லாததால் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்திய உணவகங்கள்...

சீனா நோக்கி சென்றுக் கொண்டிருந்த ரஷ்ய எண்ணெய் கப்பலான எம்.டி. அகுவா டைட்டன் இந்தியா வருகை... எண்ணெய் இறக்குமதிக்கு அனுமதி பெற மங்களூரு துறைமுகம் அருகே நடுக்கடலில் நிறுத்தி வைப்பு...

புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாம் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசிநாள்... மனுக்களை அளிக்க அரசியல் கட்சியினர் இடையே போட்டா போட்டி...

புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது... விடிய விடிய பேச்சுவார்த்தை நீடித்தும் தொகுதிப் பங்கீட்டில் முடிவு எட்டப்படவில்லை...

கூட்டணி உறுதியானாலும் தொகுதி பங்கீட்டில் திமுக - காங்கிரஸ் இடையே தொடர்ந்து இழுபறி... உடன்பாடு எட்டப்படாததால் கோபத்துடன் சென்ற தலைவர்கள்...

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு... உப்பளத்தில் அன்பழகன், உருளையன்பேட்டையில் காந்தி போட்டி...

புதுச்சேரி தேர்தல் - அதிமுக
புதுச்சேரி தேர்தல் - அதிமுகweb

புதுச்சேரி அதிமுக துணைச் செயலர் வையாபுரி மணிகண்டன் கட்சியிலிருந்து விலகல்... கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்ஆர் காங்கிரஸில் இணைந்தார்...

காரைக்கால் தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் அருள்முருகன் போட்டியிடுவார் என அறிவிப்பு... போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக...

புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தவெக... பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சாய் சரவணன் குமார் திருபுவனையில் போட்டி...

திமுக - மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சிபிஎம் நிர்வாகிகள் ஆலோசனை...

6 தொகுதிகளை தக்கவைத்துக் கொள்வதில் விடாப்பிடியாக நிற்கும் சிபிஎம்... 5 தொகுதிகளை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்திய மு.க.ஸ்டாலின்...

இன்று மீண்டும் கூடுகிறது சிபிஎம் செயற்குழு கூட்டம்... திமுக தரப்பில் 5 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ள நிலையில் பரிசீலிக்கமுடிவு...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிPt web

இன்று நடக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கலந்தாய்வுக் கூட்டம்... தொகுதிகளை தேர்வு செய்வது, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து ஆலோசிக்கும் திருமாவளவன்...

திமுக கூட்டணியில் இருந்து விலகினார் வேல்முருகன்... அதிகாரிகளின் பேச்சை கேட்டு, திமுக தங்களை புறக்கணித்துவிட்டதாக வேதனை...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்வைத்த எந்த கோரிக்கைகளையும் திமுக பொருட்படுத்தவே இல்லை... கூட்டணியிலிருந்து விலகிய நிலையில் வேல்முருகன் குற்றச்சாட்டு...

பாஜகவுடனான கூட்டணிக்கு செல்லப் போவதில்லை என வேல்முருகன் திட்டவட்டம்... தங்களுடைய 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சியுடனே கூட்டணி என்றும் உறுதி...

கூட்டணியில் ஒருவர் வெளியேறும்போது குற்றச்சாட்டை வைப்பது வழக்கமான ஒன்றுதான்... வேல்முருகனின் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் துரைமுருகன் பேட்டி...

விலகிய வேல்முருகன் மீண்டும் திமுக கூட்டணியில் இணைவாரா? பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புள்ளதாக திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி...

வரும் சட்டமன்ற தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியிடவில்லை என தகவல்... பொன்முடி விருப்ப மனு அளிக்கவில்லை என அவரது மகன் கெளதம சிகாமணி பேட்டி...

ஸ்டாலின் - வேல்முருகன்
ஸ்டாலின் - வேல்முருகன்web

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று தொடக்கம் என எதிர்பார்ப்பு... அதிமுக, பாஜக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள் என ஆலோசிக்க சென்னை வருகிறார் பியூஷ் கோயல்...

சென்னை தியாகராய நகரில் ஆதரவாளர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சரத்குமார் ஆலோசனை... பாஜகவில் பொறுப்புக்காக இன்னும் எத்தனை நாட்கள் காத்திருப்பது, பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு...

சுதந்திரமடைந்து 79 ஆண்டுகளை கடந்தும், ரயில் நிலையத்தை பார்த்ததில்லை என பெரம்பலூர் மக்கள் வேதனை... நகராட்சிக்கே தகுதியில்லாத நிலையில் பெரம்பலூர் இருப்பதாகவும் மக்களுடன் புதிய தலைமுறையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்த வாக்காளர்கள்...

மதுரை திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அலுவலகத்தில் பறக்கும் படையினர் சோதனை... பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுவதாக கிடைத்த தகவலை அடுத்து சென்னை அம்பத்தூர் அதிமுக அலுவலகத்திலும் விசாரணை...

மதுரையில் அரசியல் கட்சிகளின் பரப்புரை பொருட்களின் விற்பனை மும்முரம்... கட்சிகளின் கொடிகள், அட்டைகள், தொப்பி, துண்டுகளை வாங்கிச்செல்லும் தொண்டர்கள்...

கேரளாவில் பாஜக - மார்க்சிஸ்ட் இடையே ரகசியக் கூட்டணி இருக்கிறது... காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் சரமாரி குற்றச்சாட்டு...

அசாம் சட்டமன்றத் தேர்தலையொட்டி ஐந்தாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்... இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையும் சூழலில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு...

2026 சட்டமன்ற 5 மாநில தேர்தல்
2026 சட்டமன்ற 5 மாநில தேர்தல்web

ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின்னுற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் நடத்தப்படும்... ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...

ஈரானின் மின்னுற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு எரிசக்தி, ஐ.டி.,குடிநீர் கட்டமைப்புகளை குறிவைப்போம்... ஹோர்முஸ் நீரிணையை திறக்கக்கோரி ட்ரம்ப் 48 மணி நேர கெடு விதித்த நிலையில் ஈரான் பதில் எச்சரிக்கை...

எதிரிகளை தவிர மற்ற நாட்டினர் அனைவருக்கும் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவிப்பு... தற்போதைய சூழலில் அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலே காரணம் என்றும் குற்றச்சாட்டு...

ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்தி உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க ஈரான் முயற்சிக்கிறது... இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றச்சாட்டு...

ஈரான் தாக்குதலில் சேதமடைந்த நகரங்களை பார்வையிட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு... பொதுமக்கள் பதுங்குக்குழிகளை தற்காலிகமாக பயன்படுத்தவும் அறிவுறுத்தல்...

ஈரானுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென உலக நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு... இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உலக நலனுக்காக செயல்படுவதாகவும் நெதன்யாகு பேட்டி...

போர் விதிமுறைகளை மீறி ஈரான் படைகள் கொத்துக் குண்டுகளை பயன்படுத்துகிறது... பொதுமக்களை முடிந்தவரை பாதிப்புக்கு உள்ளாக்குவதே நோக்கம் என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் சாடல்...

ஈரான் - அமெரிக்கா
ஈரான் - அமெரிக்காPt web

டியாகோ கார்ஸியா தீவிலுள்ள பிரிட்டிஷ் கடற்படைத்தளத்தை தாக்கவில்லை என ஈரான் மறுப்பு... 4,000 கி.மீ தொலைவுக்கு செல்லும் திறனுள்ள ஏவுகணையை வைத்திருப்பதாக தகவல் வெளியான நிலையில் விளக்கம்...

ஈரான் மீது தரைவழித்தாக்குதலுக்கு பரிசீலிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்... தரை வழி போருக்கான தாக்குதல் யுக்தியை பென்டகன் உருவாக்கியுள்ளாகவும் தகவல்...

தெற்கு லெபனானில் உள்ள முக்கிய வழித்தடமான காஸ்மியா பாலத்தை ஏவுகணை வீதி தகர்த்த இஸ்ரேல் படைகள்... ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்தவும் திட்டம்...

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா பகுதியில் உள்ள எண்ணெய் சேமிப்பு நிலையத்தில் தீ விபத்து... ஏவுகணை தாக்குதல்களுக்கு பின்னர், பெரிய புகை மூட்டம் எழுந்ததாகவும், கிடங்கில் சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்...

மேற்காசியாவில் நடைபெறும் போர் முழு மனிதக்குலத்திற்கே அவமானம் என போப் 14ஆம் லியோ கருத்து... அனைத்து தரப்பினரும் உடனடியாக மோதலை நிறுத்துக் கொள்ளவும் வலியுறுத்தல்...

ஈரானுக்கு எதிரான போரை நிறுத்தக்கோரி ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் போராட்டம்... அமெரிக்கா, இஸ்ரேலுக்கு நெருக்கடி தரவேண்டும் என உலக நாடுகளை வலியுறுத்தி முழக்கம்...

மேற்காசிய போரில் ஈரானுக்கு ஆதரவாக நிதி திரட்டும் முயற்சியில் காஷ்மீர் மக்கள்... தங்கம், வெள்ளி பொருட்கள் மட்டுமின்றி பணம் கொடுத்தும் ஈரான் மக்களுக்கு உதவிக்கரம்...

ஈரான் - இஸ்ரேல்
ஈரான் - இஸ்ரேல்web

சென்னையில் பறவைக் காய்ச்சல் நோய் பரவல் நிலையில் நெறிமுறைகளை பின்பற்ற சுகாதாரத்துறை அறிவுறுத்தல்... முழுமையாக சமைக்கப்படாத முட்டை, இறைச்சி வகைகளை உண்பதை தவிர்க்க வேண்டுமென அட்வைஸ்...

நீலகிரி மாவட்டம் மசினகுடி சுற்றுவட்டார பகுதியில் மழை இல்லாததால் நிலவும் கடும் வறட்சி... உணவுக்காக கால்நடைகள் சாலையோரம் சுற்றித் திரியும் அவலம்...

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்... சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு...

தமிழ்நாட்டில் வரும் 26ஆம் தேதி வரை வெப்பம் அதிகம் இருக்கும்... இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என கணிப்பு...

சேலம் ஆத்தூர் அருகே தேனீக்கள் கொட்டியதில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயம்... கோயில் விழாவில் பொங்கல் வைத்த போது எழுந்த புகையால் நிகழ்ந்த சோக சம்பவம்...

மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டி குகி-ஜோ குழுவுடன் முதல்வர் யும்னாம் சிங் பேச்சுவார்த்தை... மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கையுடன் அமைதிப் பாதையில் செல்ல முதல்வர் அறிவுறுத்தல்...

காஷ்மீர், இமாச்சலை தொடர்ந்து உத்தராகண்ட் மாநிலத்திலும் கடும் பனிப்பொழிவு... 3 முதல் 4 அடி உயரத்திற்கு பனியால் நிரம்பிய புகழ்பெற்ற கேதர்நாத் கோவில் வளாகம்...

snowfall
snowfallTwitter

மார்ச் மாதத்தின் முதல் 3 வாரத்தில் இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து 88 ஆயிரத்து 180 கோடி ரூபாய் வெளியேற்றம்... 2026ஆம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் வெளியேறியதால் முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு...

எரிவாயு தட்டுப்பாட்டால் இந்தியாவின் யூரியா உற்பத்தி பாதியாக குறைந்தது... மூலப்பொருள் தாமதம், தட்டுப்பாட்டால் பல்வேறு தொழிற்துறைகளுக்கு பாதிப்பு என சிஐஐ தொழில் அமைப்பு அறிக்கை...

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் மீண்டும் உயர்வு... எரிபொருள், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த மக்களுக்கு அரசு வேண்டுகோள்...

உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்டில் பாகிஸ்தான் முதலிடம்... இந்தியாவில் 43 சதவீதம் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறைந்திருப்பதாகவும் ஆய்வறிக்கை...

துருக்கியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், கத்தார் மற்றும் துருக்கியைச் சேர்ந்த 7 வீரர்கள் உயிரிழப்பு... உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் இரங்கல்...

தோனி
தோனிபிசிசிஐ

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வா? நடிகர் சிவகார்த்திகேயன் எழுப்பிய கேள்விக்கு காத்திருங்கள் என பதிலளித்த தோனி...

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் சின்னர், மெட்வடேவ், ஸ்வெரெஃப் உள்ளிட்டோர் வெற்றி... நடப்பு சாம்பியன் மென்சிக் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறி அசத்தல்...

வசூல் வேட்டை நடத்தும் துரந்தர் 2 திரைப்படம்... மூன்றே நாட்களில் 500 கோடி ரூபாயைக் கடந்தது...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com