Headlines| தமிழக தேர்தலை நிறுத்திவைக்க கோரி வழக்கு to கப்பல் போக்குவரத்துக்காக ஈரானுடன் மோடி பேச்சு!
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற தேர்தல் பறக்கும் படை சோதனையில் இதுவரை 75 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்... 5 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களும் சிக்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்...
வாக்குச்சாவடி மையம், வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை நிறுத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு... தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை மோசமாகி உள்ளதாக மனுவில் குற்றச்சாட்டு...
தேசிய பொதுச் செயலர் எம்.ஏ.பேபி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய ஆலோசனை... திமுக தரும் 5 தொகுதிகளை ஏற்பதற்கு சென்னையில் ஒரு தொகுதி வேண்டுமென நிபந்தனை விதிக்க முடிவு...
திமுக கூட்டணியில் விசிகவுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்குவதால் வலி இருக்கிறது... புரிதல் இருப்பதால் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வை எட்ட உள்ளோம் என்றும் புதிய தலைமுறைக்கு திருமாவளவன் பேட்டி...
போயஸ் கார்டனை தேடி வந்த நிலை மாறி, டெல்லியை தேடிச் செல்லும் நிலையில் உள்ளது அதிமுக... எடப்பாடி கே.பழனிசாமியை கிள்ளுக்கீரையாக பாஜக பயன்படுத்துவது கவலைக்குரியது என திருமாவளவன் கருத்து...
தேர்தல் உத்தியை வகுக்கவே டெல்லி சென்றதாக டிடிவி தினகரன் விளக்கம்... பிஹார் உத்தியைத் தமிழகத்திலும் கையாள்வோம் என்றும் அமித் ஷாவை சந்தித்த பின் பேட்டி...
டெல்லிக்கு நாங்கள் வந்தாலே பயப்படுகிறார் ஸ்டாலின்... டெல்லியைக் காட்டி திமுகவால் இனி ஏமாற்ற முடியாது என்றும் தினகரன் திட்டவட்டம்...
திமுக கூட்டணியில் ஏற்கனவே போட்டியிட்டு வென்ற பாபநாசம், மணப்பாறை தொகுதிகளை மீண்டும் வழங்க கேட்டுள்ளோம்... மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா புதிய தலைமுறைக்குப் பேட்டி...
நாளை தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்... தினமும் நான்கு அல்லது ஐந்து இடங்களில் பரப்புரை மேற்கொள்ள திட்டம்...
தமிழ்நாட்டிற்கு திமுகவும், புதுச்சேரிக்கு காங்கிரசும் தலைமை என்ற மரபை பின்பற்றுவோம்... காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் திட்டவட்டம்...
புதுச்சேரியில் உப்பளம், உருளையன்பேட்டை தொகுதிகளில் போட்டியிடுகிறது அதிமுக... இரண்டு முறை ஆட்சி செய்த அதிமுக, தற்போது இரண்டு தொகுதிகளில் மட்டும் போட்டி...
கூட்டணி தர்மம், சூழல் காரணமாக புதுச்சேரியில் 2 தொகுதிகளில் போட்டியிட ஒப்புகொண்டோம்... 2 தொகுதிகளிலும் வெல்வோம் என அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் பேட்டி..
புதுச்சேரி பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட முன்னாள் அமைச்சர் சாய் சரவணகுமார் தரப்பு... ஊசுடு தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், கட்சித் துண்டுகளை கழற்றி வீசியும், உறுப்பினர் அட்டையை எரித்தும் போராட்டம்...
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தவெக வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடுகிறார் விஜய்... வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் பொதுச்செயலர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் தீவிரம்...
ராமநாதபுரம் அருகே பரப்புரையில் குழந்தைகளை ஈடுபடுத்தியதாக புகார்... தவெக மாவட்ட செயலர் மீது போலீஸார் வழக்குப்பதிவு...
திருச்சியில் கள் இறக்கிய பனைத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு சீமான் கண்டனம்... பயங்கரவாதிகள் போன்று சித்தரித்தது கொடுங்கோன்மையின் வெளிப்பாடு எனவும் சாடல்...
போருக்கு இடையில் ஈரானில் பிறந்த புத்தாண்டு... ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பொருளாதாரத்தை மீட்போம் என உயர் தலைவர் மொஜ்தபா வாழ்த்துச் செய்தி...
ஜெருசலேமில் இஸ்லாமிய, கிறிஸ்தவ, யூத புனிதத் தலங்களுக்கு அருகே தாக்குதல்... இதுவே ஈரானின் உண்மையான முகம் என இஸ்ரேல் கண்டனம்...
இஸ்ரேல் மீது மீண்டும் கொத்துக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரான்... மழலையர் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் குண்டுகள் விழுந்ததில் பலர் காயமடைந்ததாக தகவல்...
இந்திய பெருங்கடலில் அமெரிக்கா-பிரிட்டன் கூட்டு ராணுவத் தளம் மீது தாக்குதல் நடத்த ஈரான் முயற்சி... 4 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணையை ஏவி உலக நாடுகளுக்கு மிரட்டல்...
நடான்ஸ் அணுசக்தி நிலையம் தாக்கப்பட்டதாகவும், கதிர்வீச்சு வெளியாவில்லை என்றும் ஈரான் அரசு ஊடகம் தகவல்... மிக ஆபத்தான பகுதியில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம்...
லெபனான் எல்லை அருகே படைகளை குவிக்கும் இஸ்ரேல் ராணுவம்... ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீது தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்தும் திட்டம் என தகவல்...
ஈராக்கின் பாக்தாத் உளவுத்துறை தலைமை அலுவலகம் மீது குண்டுவீசி தாக்குதல்... உள்நாட்டு பிரிவினை அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாக தகவல்...
ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி பரிசீலிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து... அமைதி ஒப்பந்தம் தொடர்பாக பேச ஈரானில் முக்கியத் தலைவர்கள் யாரும் இல்லை எனவும் கிண்டல்...
ஒவ்வொரு டேங்கர் கப்பலுக்கும் 17 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்... ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு...
உலகில் முக்கிய வணிக வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும்... ஈரான் அரசுக்கு ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 22 நாடுகள் கூட்டாக கோரிக்கை...
ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு... தடையற்ற கப்பல் போக்குவரத்து, பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்...
இந்திய எல்பிஜி கப்பலுக்கு உதவிய ஈரான் அரசு... ஈரான் கடற்படையின் வழிகாட்டுதலுடன் இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்ததாக தகவல்...
மாநிலங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் ஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்த மத்திய அரசு முடிவு... மேற்காசிய போரால் குறைக்கப்பட்ட நிலையில், வரும் 23ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருமென தகவல்...
மேற்காசிய போரால் நாடு எதிர்கொள்ளவிருக்கும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை... 5 மாநிலத் தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்த மத்தியஅரசு திட்டம் எனவும் ராகுல் காந்தி விமர்சனம்...
தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலுக்கு 3 ரூபாயும், 20 லிட்டர் கேனுக்கு 5 ரூபாயும் விலை உயர்வு... மூலப்பொருள், மின் கட்டண உயர்வே காரணம் என அறிவிப்பு...
தேனி ஆண்டிபட்டியில் சமையல் கேஸ் சிலிண்டர் வாங்க, நாள்தோறும் வெயிலில் காத்திருக்கும் நிலை... திருவள்ளூரில் மண் அடுப்புக்கு மாறும் மக்கள்...
திருவண்ணாமலை கோயிலில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டு பிரசாதம் நிறுத்தம்... விறகு அடுப்பில் லட்டு தயாரிப்பதற்கு அனுமதிபெற கோயில் நிர்வாகம் முயற்சி...
ஹரியானாவில் சிலிண்டர் பரிமாற்றத்தை எளிதாக்க எல்பிஜி ஏடிஎம்-ஐ அறிமுகப்படுத்திய பாரத் கேஸ்... கட்டணத்தைச் செலுத்தினால், இரண்டு முதல் மூன்று நிமிடங்களில் சிலிண்டர் பெறும் வகையில் ஏற்பாடு...
கேரளத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் அரசியல் களம்... வேட்புமனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியினர் இடையே போட்டா போட்டி...
ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் பாஜகவின் பி டீம் போன்று செயல்படுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம்... திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியதால் மட்டும் மக்கள் பாஜகவின் பக்கம் இருப்பதாக அர்த்தமில்லை எனவும் கருத்து...
பாஜகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே மறைமுக புரிதல் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு... காங்கிரஸை பாஜகவின் பி டீம் என பினராயி விஜயன் விமர்சித்திருந்த நிலையில் கே.சி.வேணுகோபால் பதிலடி...
ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் சஸ்பெண்ட்... மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த விவகாரத்தில் நவீன் பட்நாயக் நடவடிக்கை...
காஷ்மீரில் நடந்த ரமலான் பண்டிகை கொண்டாட்டத்தில் எதிரொலித்த ஈரான் விவகாரம்... மறைந்த அயதுல்லா அலி காமேனி படத்தை கையில் ஏந்தி ஆதரவு முழக்கங்களை எழுப்பி நூற்றுக்கணக்கானோர் பேரணி...
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சந்திரபாபு நாயுடு குடும்பத்தினர் 44 லட்சம் ரூபாய் நன்கொடை... கோயிலில் வழிபாடு செய்ததுடன் பக்தர்களுக்கு உணவு பரிமாறி கலந்துரையாடல்...
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உணவகமாக மாற்றப்பட்ட பழைய விமானம்... புதிய அனுபவம் கிடைப்பதாக வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி...
வேதாரண்யம் அருகே வளர்ப்பு நாயை அவிழ்த்துவிட்டு தாயையும் மகளையும் கடிக்க வைத்த அதிர்ச்சி சம்பவம்... நாய் உரிமையாளர் மீது பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகார்...
தெருவில் தனியாக நடந்து சென்ற சிறுமியை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்கள்... தெலங்கானாவில் நடந்த துயரச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு...
விளைபொருட்களில் இருந்து உயிரி எரிபொருட்கள் தயாரிப்பதில் பிரேஸில் மும்முரம்... உலகளவில் கச்சா எண்ணெய் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மாற்றுப்பாதையில் பயணம்...
எத்திலீன் கிளைக்காலை நிலக்கரியில் இருந்து தயாரிக்கும் மிகப்பெரிய ஆலையை திறந்தது சீனா... 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலையின் பிரம்மாண்ட திறப்பு விழா கோலாகலம்...
ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய கார்களை பரிசோதிக்கும் சீனாவின் கீலி (GEELY) நிறுவனம்... தானாக சிந்தித்து சுயமாக செயல்படக்கூடிய புதிய கார்கள்...
உலகளவில் வசூல் வேட்டை படைக்கும் துரந்தர்-2 திரைப்படம்.. படத்தின் காட்சிகள் பிரமிக்க வைப்பதாக இயக்குநர்கள் ஷங்கர்,
ராஜமௌலி பாராட்டு...

